Virgin Mary is a model for us all who shows the image of God in us – Bangladesh Bishop

Mary
No Gravatar

கடவுள் மனிதரிடையே தன் சாயலைக் காண விழைகிறார், கடவுளின் சாயலை முழுமையாக வெளிப்படுத்திய அன்னை மரியா நமக்கெல்லாம் தலை சிறந்த எடுத்துக்காட்டு என்று பங்களாதேஷ் ஆயர் ஒருவர் கூறினார்.
பங்களாதேஷின் சிட்டகாங் நகருக்கருகே Diang என்ற இடத்தில் அமைந்துள்ள பாத்திமா அன்னை மரியாவின் திருத்தலத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவைக் குறித்துப் பேசிய சிட்டகாங் மறைமாவட்டத் துணை ஆயர் Lawrence Subrata Howlader இவ்வாறு கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்தத் திருப்பயணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Diangல் அமைந்துள்ள தலத் திருஅவை இயேசு சபை குருக்களால் ஆரம்பிக்கப்பட்டது. 1602ம் ஆண்டு அங்கு அருள்பணி செய்த இயேசு சபை குரு Francesco Fernandez, அப்பகுதியைத் தாக்கிய கொள்ளைக் காரர்களால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார்.
1940களில் அப்பகுதியில் திருச்சிலுவை துறவு சபையைச் சார்ந்த அருள்சகோதரர் Flavian Laplante பணிபுரிந்தபோது, பாத்திமா அன்னை திருத்தலத்தை உருவாக்கினார்.
1981ம் ஆண்டு மறைந்த அருள்சகோதரர் Laplanteஐப் புனிதராக்கும் முயற்சிகளின் ஆரம்ப கட்டமாக, அவர் ஓர் இறையடியாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD