பற்றிமாவில் கொடுக்கப்பட்ட 3 இரகசியம் – Three Secrets of Fatima in the Apparition

Fatima children
No Gravatar

பற்றிமா நகரில் தேவமாதா 3 சிறுவர்களுக்கு 1917 இல் காட்சி கொடுத்தது எல்லோருக்கும் தெரிந்ததே.

அந்த காட்சியில் 3 இரகசியங்களும்  கொடுக்கப்பட்டது. இந்த 3 இரகசியங்களும் காட்சிகளோடு சம்பந்தப்பட்டது.


இதில் என்ன இரகசியம் அடங்கியிருக்கிறது என்று கேட்டதற்கு லூசியா இவ்வாறு பதில் கூறியிருக்கிறார்.
” வானகத்திலிருந்து எனக்கு உத்தரவு கொடுக்கப்பட்டதால் இதை நான் வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.
உலக்த்திலிருக்கும் கடவுளுடைய பிரதிநிதிகளின் வேண்டுகோளின் படியும் இதை வெளியிடுகிறேன். குறிப்பாக Father José Bernardo Gonçalves இவற்றைப் பற்றி பாப்பானவருக்கு எழுதும்படி கூறினார். என்னுடைய கடிதத்தை நீண்டது ஆக்காமல் சிறியதாக எழுதுகிறேன்.

இரகசியமானது மூன்று பகுதிகளைக் கொண்டது. இப்போது பகுதி ஒன்று, பகுதி  இரண்டு ஆகியவற்றையே வெளியிடுகிறேன்.”

முதலாவது காட்சி.

எமது தேவதாயார் நெருப்பு கடல் போன்ற நரகத்தைக் காட்டினார். அது பூமிக்கு அடியில் இருப்பது போன்று தோன்றியது. இந்த நெருப்பு கடலுகுள் பல சாத்தான்கள்,  மனித சாயலில் ஆனால் முழுவதும் கறுப்பாக இருந்தது. நெருப்பிலே அவைகள் மிதந்தன. எங்கும் புகை மண்டலமாக காணப்பட்டன. அழுகையும் பற்கடிப்பும் எங்கும் காணப்பட்டன. நாங்கள் அதைப் பார்த்து பயத்தில் உறைந்துபோய்விட்டோம். மிகவும் பயங்கரமான காட்சியாக நரகம் இருந்தது. “நாங்கள் எவ்வாறு எமதுபரலோக அன்னைக்கு நன்றி சொல்லுவது என்று தெரியவில்லை. ஏனென்றால் தனது முதலாவது சந்திப்பிலேயே எம்மை பரலோகத்திற்கு கூட்டிப்போவதாக அவர் கூறியிருந்தார். இல்லாவிட்டால் நாம் பயத்திலேயே செத்திருப்போம்” இவ்வாறு மூன்று குழந்தைகளும் தெரிவித்தார்கள்.

இரண்டாவது காட்சி.

நாங்கள் தேவ அன்னையை உற்றுநோக்கியபோது அந்த அன்னை இரக்கத்தோடும், அமைதியோடும் இவ்வாறு சொன்னார்.

” நீங்கள் இப்போது நரகத்தைப் பார்த்தீர்கள். பல அப்பாவி ஆன்மக்கள் அங்கே போய்க்கொண்டிருக்கின்றன. இவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் என்னுடைய மாசற்ற இதயத்திற்கு பக்தி ஏற்படுத்தப்படவேண்டும் என்று இறைவன் விரும்புகின்றார். இவ்வாறு செய்யப்பட்டால் பல ஆன்மாக்கள் காப்பாற்றப்படும், அங்கே அமைதியும் நிலவும். யுத்தமும் முடிவுக்கு வரும். மக்கள் தொடர்ந்தும்  கடவுளை புறக்கணித்து பாவம் செய்தால், பயங்கடமான அழிவு பாப்பானவர் 11ஆவது பயஸ் காலத்தில் இடம்பெறும்.

ஒரு இரவு , நமக்குத் தெரியாது பிரகாசமான வெளிச்சத்தினால் அந்த இரவு முழுவது பிரகாசிக்கின்றபோது, இறைவன் உங்களுடைய பாவங்களுக்காக இந்த உலகத்தை தண்டிக்கப் போகிறார், அதற்கான் அடையாளமே இந்த பிகாசமான நமக்குத் தெரியாத வெளிச்சம் என்பதி உணர்ந்து கொள்ளுங்கள். யுத்தங்கள், பஞ்சம், பட்டினி, சித்தரவதைகள், திருச்சபை பல உபாதைகளுக்கு உட்படல் போன்றவற்றினால் இவைகள் ஏற்படும்.

இவற்றில் இருந்து  தப்ப வேண்டும் என்றால்  ரஷ்சியா நாட்டை எனது மாசற்ற இருதயத்திற்குள் ஒப்புக்கொடுக்க வேண்டும், அத்தோடு மாதத்தின் முதற் சனிக்கிழமை எனது மாசற்ற இதயத்திற்கு பக்தி முயற்சி செய்யப்பட்டு  நற்கருணை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யப்பட்டால், ரஷ்சியா மனமாற்றப்படும், அமைதியும் நிகழும். இல்லாவிட்டால் ரஷ்யா தன் தீமைகளை உலகெங்கும் பரப்பும், திருச்சபை துன்புறுத்தப்படும். நல்லவர்கள் கொலைசெய்யப்படுவார்காள். பரிசுத்த பாப்பானவர் நிறைய துன்பப்பட வேண்டி இருக்கும். பல நாடுகள்  அழிந்து போகும். கடைசியில் எனது மாசற்ற இருதயமே வெற்றிகொள்ளும். பரிசுத்த பாப்பானவர் ரஷ்சியாவை எனது மாசற்ற இருதயத்திற்குள் ஒப்புக்கொடுப்பார். ரஷ்சியா மனமாற்றப்படும். உலகத்திற்கு சில காலத்திற்கு அமைதி வழங்கப்படும்.

 

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD