இயேசுவின் திருக்காயங்களை பெற்ற Father Padre Pio – The Stigmata of Padre Pio

89EU5CAT08UVOCANUNUPJCAIXIU0CCA50T6SXCAJXECY1CAUD3BJICA1XLFFZCA1AOYWQCAUUQVMHCAXVGTVVCAQH5V3SCA8RYH8PCARKFC1DCA6BZU6TCAH4M51SCA0H8I5KCA0OQMSOCA656QT3
No Gravatar

Francesco Forgione என்பது உண்மையான பெயர். ஆனால் இவர் Padre Pio என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார், இவர் 1887 மே 25 இல் பிறந்தவர்.

இவருடைய வாழ்வில் விசேடம் என்னெவென்றால் குருவாக இருக்கும்போதே இயேசுவின் திருக்காயங்களை தம்முடைய கரங்களில் தாங்கப் பாக்கியம் பெற்றவர். உலகம் முழுவதும் “இயேசுவின் திருக்காயம் பெற்ற குரு” என்று போற்றப்படுகின்ற ஒரு புனிதராக இவர் விளங்குகின்றார்.

 

இவர் குழந்தையாக இருக்கும்போதே இறைவனோடு நெருங்கிய உறவு கொண்டவர். பல பரித்தியாகங்களை செய்யும் ஒருவர் இவர். இவர் கற்கள் நிறைந்த தரையில் தூங்குவார், தலையணைக்கு கல்லையே வைத்திருப்பார். இப்படி பல பரித்தியாகங்களை செய்பவர்.

இவருடைய தாயார் இவரைப் பற்றி கூறும்போது இவ்வாறு சொல்லுவார். பாதர்  பட்ரோ பீஒ  இயேசுவோடு நேரடியாகவே பேசக்கூடியவர், தேவ மாதாவோடும், காவல்சம்மனசானவரோடும் பேசுகிறவர். பரலோக காட்சிகளை அடிகடி காண்பவர்.  இதனால் பலவேளைகளில் பரவச நிலையில் இருப்பவர்.

இவர் எப்போது சுகமான உடல் நிலையைக் கொண்டவர் அல்ல. தொடர்ச்சியாக சுகயீனமற்றே இருந்தார். ஒரு நோயிலிருந்து மறு நோயினால் தாக்கப்படுவார்.  அவரோடு நெருங்கிப் பழகுபவர்கள்  சொல்லுவார்கள் இரவு நேரங்களில் அவருடைய அறையில் இருந்து பயங்கரமான உறுமும் சத்தம் வரும் என்று. செபம் சொல்லும்போது பரவச நிலையில் செபிப்பார்.

1910 இல் இவர் குருவாக திருநிலைப்படுத்தப் பட்டார். இவர் குருவானதன்பின் இவர் பாதர் பட்ரோ பீயோ என்று அழைக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் இவர் இயேசுவின் திருக்காயங்களை அனுபவிக்கத்தொடங்கினார்.

 

அவர் இவ்வாறு எழுதியிருந்தார்,

“கடந்த இரவு என்னால் புரிந்து கொள்ளவோ, விளங்கப்படுத்தவோ முடியாத அளவுக்கு ஒர் அனுபவம் ஏற்பட்டது. என்னுடைய உள்ளங்கையில் சிகப்பு நிறத்தாலான அடையாளம் தோன்றியது. அதில் நோவை உணரக்கூடியதாக இருந்தது. இடது கை உள்ளங்கையில் வேதனையும் நோவும் அதிகமாக இருந்தது. எனது கால்களின் நடுப்பகுதியிலும் நோவு இருந்தது.”

 

தொடரும்…..

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD