சிறுவர்கள் இருவரின் செபத்தின் தன்மை – Prayers of two boys. Christian Jokes
வயதுமுதிர்ந்த ஒரு பாட்டியோடு 2 சிறுவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இரண்டு சிறுவர்களும் அன்று இரவு நித்திரைக்கு செல்வதற்கு முன்பு, வழமை போல செபம் செய்தார்கள்.
இரண்டு சிறுவர்களில் மூத்த பையன் செபம் சொல்லத் தொடங்கினான். அவன் தன்னுடைய செபத்திலே அன்றைய நாளில் தான் செய்த எல்லா செயல்களையும் நினைத்து செபித்தான்.
அதன்பிற்பாடு இளைய பையன் செபிக்கத் தொடங்கினான். இளைய பையன் தன் அண்ணனைவிட மிகுந்த சத்தமாகவே செபித்தான்.
அவன் செபிக்கும்போது தன்னுடைய செபத்தில் தனக்கு மிதி வண்டி வேண்டும், பொம்மைகள் வேண்டும் என்று சத்தமாகச் செபித்தான்.
இதை அவதானித்த அண்ணன் தன் தம்பியைப் பார்த்து, ஏன் இப்படி சத்தமாக கத்தி செபிக்கிறாய் கடவுள் காது கேட்காத செவிடா என்று கேட்டான்.
அதற்கு தம்பி சொன்னான் , கடவுள் காது கேட்காத செவிடோ இல்லையோ எனக்குத் தெரியாது. . . ஆனால் நம்முடையா பாட்டிக்கு காது கேட்காது. அதுதான் சத்தமாகச் சொல்லுறன். அப்படிச் சொன்னால் பாட்டியின் காதில் கேட்கும். எனக்கும் மிதிவண்டியும், பொம்மையும் கிடைக்கும். என்றான்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





