கிறிஸ்தவக் கரடியும் அஞ்ஞானியும் – Christian Jokes

stock-illustration-12889968-cartoon-business-man-afraid-of-bear-market
No Gravatar

கடவுளே இல்லை என்று சொல்லுகிற ஒருவன் காட்டுவழியே நடந்து சென்றான். அவன் நடந்து செல்லுகிறபோது,

அங்கிருந்த மிருகங்களைப் பார்த்து “எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று புகழ்ந்தான்.

அதேபோன்று மரங்களைப் பார்த்து “எவ்வளவு பெரிதாக இருக்கிறது” என்று புகழ்ந்தான்.

அங்கிருந்த ஆறுகளைப்பார்த்து “எவ்வளவு சக்திவாய்ந்தது” என்று புகழ்ந்தான்.

அப்படி நடந்து செல்லுகிறபோது திடீரென அங்கே 8 அடி உயரத்தில் ஒரு கரடி தோன்றி அவனத் துரத்தத் தொடங்கியது. அவன் பயதில் ஓடத்தொடங்கினான். சிறிது தூரம் ஓடிய பின் அவன் திரும்பிப்பார்த்தன் கரடி வேகமாக அவனைத்தொடந்தது. இன்னும் வேகமாக ஒடினான். கடைசியில் கரடி அவனுக்கு முன்னால் வந்தது. அவன் பயத்தில் “கடவுளே என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினான்.

எங்கும் அமைதி……

எங்கும் அமைதி……

வானத்தில் இருந்து ஒரு ஒளி அந்த மனைதனின் முகத்தில் விழுந்தது. ஒரு குரல் அவனோடு பேசியது.

“நீ நான் இருக்கிறேன் என்று நம்புவது இல்லை. உலகமே என்னால் உண்டாக்கப்பட்டது என்றும் நம்புவது இல்லை. ஏன் இப்போது மாத்திரம் உனக்கு உதவி செய்ய என்னைக் கூப்பிடுகிறாய்” என்று கேட்டது.

கடவுள் இருக்கிறார் என்று நம்பாதவன் சொன்னான், திடீரென என்னை கிறிஸ்தவனாக மாற்ற முற்படுகிறாய். ஆனால் இந்த கரடியை கிறிஸ்தவ கரடியாக மாற்ற முடியுமா என்று கேட்டான்.

கடவுள் சொன்னார் என்னால் மாற்ற முடியும் என்று …

இருந்த வெளிச்சம் மறைந்தது…….

காட்டில் இருந்தா அமைதியும் குலைந்தது………

கரடி கிறிஸ்தவ கரடியாக மாறியது. எப்படி?…..

கரடி தன்னுடைய இரண்டு கால்களையும் மடித்து முன்னட்டி இட்டு தலையை வணங்கி செபம் சொல்லத் தொடங்கியது.

“வானகத்தில் இருக்கிற தந்தையே எனக்கு கொடுத்த இந்த மனித உணவுக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். நான் உண்ண இருக்கும் இந்த உனவை ஆசீர்வதுத்தருளும். அமென்”

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD