இதயத்தில் இருந்து பிறக்கும் செபம் – Prayer from the heart
[mappress mapid="4"]விறகு வெட்டி ஒருத்தன் காட்டுக்கு விறகு வெட்டச் செல்வது அவனுடைய நாளாந்த தொழில். அவன் கடவுளில் மிகுந்த பக்தி கொண்டவன். எழுத வாசிக்கப் படித்திருந்தான், அதைவிடப் பெரிய படிப்புக்கள் அல்ல.
ஒவ்வொரு நாளும் அவன் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது, தன்னுடன் சிறிய செபப் புத்தகத்தையும் கொண்டு செல்வான். தன் தொழிலைச் செய்வதற்கு முதல் தான் கொண்டு சென்ற அந்த சிறிய செபப் புத்தகத்தில் இருந்து செபத்தைப்படித்துவிட்டு , வேலை செய்வது அவனுடைய வழக்கம்.
ஒருநாள் அவன் தன்னுடைய செபப் புத்தகத்து தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்துவிட்டான். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. செபத்தைப் படிக்காமல் அவன் வேலை செய்வது இல்லை.
எனவே அவன் முழந்தாள்படி இட்டு கடவுளைப் பார்த்து வேண்டினான். “கடவுளே நான் இன்று என்னுடைய செபப் புத்தகத்திக் கொண்டுவரவில்லை. எனக்கோ எழுதப்படிக்கத்தெரியாது. அந்தப் புத்தகத்தில் உள்ள செபத்தைப் படிப்பதுதான் எனது வழமை. அது இல்லாமல் என்னால் செபம் படிக்கத்தெரியாது. நான் என்ன செய்ய?
இருந்தாலும் நான் எனது தாய் மொழிகளில் இருக்கிற எல்லா எழுத்துக்களையும் சொல்லுகிறேன். நீர் அந்த எழுத்துக்களில் இருந்து உமக்கு விருப்பமான அழகிய செபம் ஒன்றை அமைத்துக் கொள்ளும்” என்று வேண்டினான்.
அப்போது வழமைக்கு மாறாக வானத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.
” மகனே இவ்வளவு காலமும் நீர் சொன்ன செபங்களை விட , இன்று நீ சொன்ன செபமே எனக்கு முகவும் பிடித்தமானது. எனென்றால் இந்தச் செபம் உன்னுடைய இதயத்தில் இருந்து வந்தது.”
நாம் என்ன செபம் சொல்லுகிறோம் என்பது முக்கியம் அல்ல. அதாவது நாம் புத்தகத்தில் இருந்தும் சொல்லலாம் , அல்லது நாமாகவே செபத்தை உருவாக்கிச் சொல்லலாம். ஆனால் நாம் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தையும் எமது இதயத்தில் இருந்து வரவில்லை என்றால் அது நமகு முழுமையான பலனைத்தரமாட்டா.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





