Pope Benedict XVI created 22 new cardinals on Saturday -18.02.2012

19dolan2-span-blog480
No Gravatar

இஞ்ஞாயிறன்று இப்புதிய கர்தினால்களுடன் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இப்புதிய கர்தினால்களுள் 2 பேர் ஆசியர்கள். 7 இத்தாலியர் உட்பட 16 பேர் ஐரோப்பியர்கள்.

இச்சனிக்கிழமை புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்ட 22 பேரையும் சேர்த்து தற்போது திருஅவையில் 213 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 125. எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 88.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது பாப்பிறைப் பணிக்காலத்தில் நான்காவது தடவையாக புதிய கர்தினால்களை அறிவித்துள்ளார்.
இவர் இதுவரை கர்தினால்களாக உயர்த்தியுள்ளவர்களின் எண்ணிக்கை 84.
தற்போது 71 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கர்தினால்களாக உள்ளனர். ஐரோப்பாவில் 119, வட அமெரிக்காவில் 21 (அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா), இலத்தீன் அமெரிக்கா 32, ஆப்ரிக்கா 17, ஆசியா 20 மற்றும் ஓசியானியா 4.
கர்தினால்கல், கத்தோலிக்கத் திருஅவையின் இளவரசர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

பிப்.18,2012. பிப்ரவரி 18ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்ட 22 பேர்….
திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் பேராயர் Fernando Filoni,
வத்திக்கான் பாவமன்னிப்புச்சலுகை நீதிமன்றத் தலைவர் பேராயர் Manuel Monteiro de Castro,
உரோம் மேரி மேஜர் பசிலிக்கா தலைமைக்குரு பேராயர் Santos Abril Y Castellò,
திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர் அவைத் தலைவர் பேராயர் Antonio Maria Veglio,
வத்திக்கான் நகர நாட்டின் பாப்பிறை அவைத் தலைவரும் வத்திக்கான் நகர நாட்டின் நிர்வாகியுமான பேராயர் Giuseppe Bertelli,
திருப்பீடச் சட்டப்பிரிவு அவைத் தலைவர் பேராயர் Francesco Coccopalmerio,
திருப்பீட துறவறத்தார் பேராயத் தலைவர் பேராயர் JOÃO Braz de Aviz,
எருசலேம் புனிதக் கல்லறை அமைப்புத் தலைவர் பேராயர் Edwin Frederik O’Brien, திருப்பீடச் சொத்து நிர்வாகத்துறைத் தலைவர் பேராயர் Domenico Calcagno,
திருப்பீடப் பொருளாதாரத்துறைத் தலைவர் பேராயர் Giuseppe Versaldi,
இந்தியாவின் சீரோ-மலபார் ரீதி திருஅவையின் தலைவராகிய எர்ணாகுளம் அங்கமலி உயர் பேராயர் GEORGE Alencherry,
கனடாவின் டொரோன்ட்டோ பேராயர் Thomas Christopher Collins,
செக் குடியரசின் பிராக் பேராயர் Dominik Duka,
நெதர்லாந்தின் Utrecht பேராயர் Willem Jacobus Eijk,
இத்தாலியின் பிளாரன்ஸ் பேராயர் Giuseppe Betori,
அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் பேராயர் Timothy Michael Dolan,
ஜெர்மனியின் பெர்லின் பேராயர் Rainer Maria Woelk,
சீன மக்கள் குடியரசின் ஹாங்காங் ஆயர் John Tong Hon
ரொமேனியாவின் Făgăraş மற்றும் Alba Iulia பேராயரான முதுபெரும் தலைவர் Lucian Muresan,
லுவெய்ன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் சமய வரலாற்று முன்னாள் பேராசிரியர் Namur மறைமாவட்டத்தின் அருட்பணி Julien Ries,
பல்வேறு உரோம் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய அகுஸ்தீன் சபை அருள்தந்தை Prospero Grech,
உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் இயேசு சபை அருள்தந்தை Karl Becker

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD