வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை

crucifixion
No Gravatar

திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின் இரண்டாம் நாள்

TRMvd6256554
No Gravatar

திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின் இரண்டாம் நாள்

சனிக்கிழமை காலை உள்ளூர் நேரம் 8 மணிக்கு, அதாவது இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு, Miraflores கல்லூரியில் உள்ள சிறு கோவிலில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. பின்னர் சில திருஅவை நிர்வாக அலுவல்களைக் கவனித்துவிட்டு, மாலை நேர சந்திப்புக்களுக்காகத் தயாரித்துக் கொண்ட திருத்தந்தை, அந்தக் கப்பூச்சின் அருள் சகோதரிகளின் கல்லூரியிலேயே மதிய உணவையும் அருந்தினார்.
பின்னர், உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, அதாவது இந்திய நேரம் ஞாயிறு காலை 4.30 மணிக்கு, லெயோனில் இருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள Guanajuato நகர் நோக்கி பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை. Guanajuatoவிலுள்ள மாநில நிர்வாகத் தலைமை இல்லமான La Casa del Condo Rul எனுமிடத்தில் மெக்சிகோ அரசுத் தலைவர் Felipe de Jesus Calderon Hinojosa வைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடியத் திருத்தந்தை, அரசுத் தலைவரின் குடும்ப அங்கத்தினர்களையும் சந்தித்து, பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டார். பின்னர், அரசுத் தலைவரும் தன் அரசு அங்கத்தினர்களைத் திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

50 வயதே நிரம்பிய இளைமையான அரசுத் தலைவரை சந்தித்தபின், திருத்தந்தை, லெயோன் பேராயருடன் இணைந்து Casa del Conde Rul மாளிகையின் மேல் முகப்பில் தோன்றி, அந்தக் கட்டிடத்தின் முன் வளாகத்தில் கூடியிருந்த சிறார்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். காலையிலிருந்தே பள்ளிக் குழந்தைகள் இந்த வளாகத்தில் திருத்தந்தையைக் காண கூடிவிட்டனர். முதன்முறையாக இத்திருத்தந்தையை நேருக்கு நேர் காணவிருக்கும் மகிழ்வு அவர்கள் முகங்களில் ஒளிர்ந்தது. “அமைதியின் வளாகம்” என்ற பெயர்கொண்ட அந்த வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் குழுமியிருக்க, அவர்களின் பாடல்களும், பேராலய மணி ஓசையும் இணைந்து ஒரு பெருநாள் உணர்வைக் கொடுத்த வண்ணம் இருந்தன.
மாடி முகப்பில் தோன்றியத் திருத்தந்தை, முதலில் இந்த ஆனந்த திருநாள் வரவேற்பிற்குத் தன் உள்ளம் நிறைந்த நன்றியை வெளியிட்டார். அதே வேளை, அந்நாட்டின் மோதல்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்தும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அவர்களின் துன்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். மெக்சிகோவின் வறட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் பசி, வன்முறை, கைவிடப்படல் போன்றவைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்காகச் சிறப்பான விதத்தில் செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். சிறார்கள் வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்க உதவ வேண்டிய கடமையையும் வலியுறுத்திய பாப்பிறை, இயேசு கொணர்ந்த அமைதியின் தூதர்களாக, மெக்சிகோ நாட்டில் செயல்பட வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.
சிறார்களை சந்தித்து உரை வழங்கி, அவர்களை ஆசீர்வதித்த திருத்தந்தை, உள்ளூர் நேரம் மாலை 7 மணியளவில், அதாவது இந்திய நேரம் ஞாயிறு காலை 6.30 மணிக்கு லெயோனின் Miraflores கல்லூரி நோக்கி பயணம் மேற்கொண்டார். ஒரு மணி நேரத்தில் அக்கல்லூரியை வந்தடைந்த திருத்தந்தை, அங்கேயே இரவு உணவருந்தி நித்திரையிலாழ்ந்தார். இத்துடன், திருத்தந்தையின் மெக்சிகோ நாட்டிற்கான திருப்பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

இவ்வாறு வத்திகான் இணையத்தளம் தெரிவித்துள்ளது

மோட்சத்திற்கு சென்ற மனிதன்….

Heaven
No Gravatar

ஒரு நாள் ஒரு மனிதன் இறந்தான். அவன் தன் வாழ்நாளில் செய்த நன்மைத்தனம் காரணமாக மோட்சத்திற்கு செல்லப்பட்டார்.
மோட்டசத்தின் வாயிலில் புனித பேதுரு நின்றுக் கொண்டு இவரை வரவேற்றார்.
புனித பேதுரு இவரிடம் “மோட்சத்திற்கு உன்னை அன்போடு அழைக்கின்றேன். ஏனெனில் நீ மண்ணுலகில் அனைவருக்கும் ஏற்றவாறு நல்வாழ்க்கை வாழ்ந்துள்ளாய். ஆகவே இன்று நீ மோட்சத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றாய்” என்றார். மேலும், அவர் “உனக்கு விருப்பமானால் நீ சென்று முதலில் நரகத்தை பார்வையிட்டு வரலாம்” என்று கூறினார். அம்மனிதனும் மிகவும் ஆவலுடன் கண்டிப்பாக நான்
நரகத்தை பார்வையிட வேண்டும் என்று கூறி, நரகத்தை பார்வையிடச் சென்றார்.

நரகத்தின் எல்லா படிகளையும் தாண்டி நரகத்தின் வாயிலை அடைந்ததும் நரகத்தின் கதவு அவர் முன் திறக்கப்பட்டது. அப்போது அவர் கதவின் உட்புறத்தில் ஏராளமான மக்கள் மேசையை சுற்றி அமர்ந்திருப்பதையும் அம்மேசையில் மிகவும் சுவையுள்ள உணவு வகைகள் இருப்பதையும் கண்டார். ஆனால் அங்கிருந்த அனைத்து மக்களும் கண்ணீருடனும், வேதனையுடனும், சோகத்துடனும் காணப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் கைகளுக்கு பதிலாக நீண்ட கத்தியும், முள்கரண்டியுமே உடம்பில் காணப்பட்டது. இதனால் அவர்களால் தங்களுடைய அருமையான உணவை கூட தங்கள் வாயினுள் போட முடியாமல் இருப்பதைக் கண்டார்.

அவர் உடனே மோட்சத்திற்கு சென்று, புனித பேதுருவிடம், “நான் மோட்சத்திற்கு அழைக்கப்பட்டதில் மிக்க பெருமை கொள்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு உண்மையாகவே அது ஒரு தண்டணையாக அமைந்துள்ளது” என்றார்.

புனித பேதுருவும் நல்வரவேற்புடன் மோட்சத்தின் உள்ளே அம்மனிதனை அழைத்துச் சென்றார்.

அங்கு அவர் என்ன பார்த்திருப்பார்?

அவர் அங்கும் நரகத்தைப் போல் பலவகையான சுவையுள்ள இனிமையான உணவுகளை கொண்ட மேசையை சுற்றி மக்கள் பலர் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

நரகத்தைப் போன்றே மோட்சத்தில் இருந்தவர்களுக்கும் கைகள் இல்லை. மாறாக, நீண்ட கத்தியையும் முள்கரண்டியையுமே தங்கள் கைகளில் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டார்.
ஆனால் மோட்சத்தில் அழுகையோ அங்கலாய்போ காணப்படவில்லை. மாறாக சந்தோஷமே காணப்பட்டது. ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுடைய உணவுகளை ஒருவர் வாயில் ஒருவர் ஊட்டி மகிழ்வதை காண்கின்றார். இவர்கள் நடுவே சிரிப்பும் களிப்புமே இருப்பதைக் கண்டார்.

அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில் மட்டுமே உண்மையான மகிழ்ச்சி உள்ளது.
ஆகவே தன்னலத்தை மறந்து மற்றவர்களில் அக்கறை காட்டுவதில் முதன்மையாய் இருங்கள்.
அப்போது நீங்களும் கடவுளினால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவீர்கள்.

எருசலேமை நோக்கி உலக நடைப்பயணத்’தில் இந்தியாவும் இணைந்தது

250px-JerView
No Gravatar

‘எருசலேமை நோக்கி உலக நடைப்பயணம்’ என்று துவக்கப்பட்டுள்ள தெற்காசிய முயற்சி ஒன்றில் அண்மையில் இந்தியாவும் இணைந்தது.
இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எருசலேம் நகரம் பாலஸ்தீனியர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி உலகின் பல நாடுகளுடன் இந்தியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் அண்மையில் ஆரம்பித்துள்ள இந்த உலக நடைப்பயணத்தை பாராளு மன்ற உறுப்பினர் ராம்விலாஸ் பாஸ்வான் துவக்கி வைத்தார்.
54 பேர் கொண்ட இந்தக் குழுவினரின் நடைபயணம் பல்சமய செபவழிபாட்டுடன் ஆரம்பமானது. இக்குழுவினருடன் இந்தோனேசிய, மற்றும் மலேசியப் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சேர்ந்தனர். தெற்காசிய பிரதிநிதிகள் அடங்கிய இக்குழு எகிப்து, லெபனான், சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக நடைபயணம் சென்று மார்ச் மாதம் 30ம் தேதி எருசலேம் அடைவார்கள்.
1976ம் ஆண்டு எருசலேம் நகருக்காக அமைதிப் போராட்டம் நடத்திய பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட அடக்கு முறையால் 6 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 90க்கும் அதிகமானோர் காயப்பட்டனர். 300 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். எனவே, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 30ம் தேதி பாலஸ்தீனிய நில நாள் என்று கடைபிடிக்கப்படுகிறது.
எருசலேம் நகருக்காகப் போராடிவரும் பாலஸ்தீனியர்களுடன், உலக அமைதிக்கான நோபெல் பரிசை வென்ற பேராயர் Desmond Tutu மற்றும் Mairead Maguire ஆகியோரும் எருசலேம் நகரம் பாலஸ்தீனியர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி வருகின்றனர்.

இவ்வாறு வத்திகான் இணையத்தளம் தெரிவித்துள்ளது

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வு முப்பரிமாணத் திரைப்படமாக வெளியிடப்படும்

5MRH2CA5O7HOJCA0QIMZPCA1PK79JCAXI7SGOCATVOOCKCAFA1GF1CAWRV8WRCALICEVACAZU1EU3CANKHLQ9CAVG9UOHCA2XG470CAX0WGYKCAQMHJOACALS0H66CAP2JF4ICAQQHXZACAOT62TU
No Gravatar

“தொடர்புத் துறையில் ஒவ்வொரு புதிய தொழில் நுட்பமும் வளரும்போது, அவற்றுடன் இணைந்து செல்ல திருஅவை முயன்று வருகிறது என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வை முப்பரிமாணத் திரைப்படமாக வெளியிடும் முதல் முயற்சியாக இப்புதனன்று பத்திரிக்கையாளர்களுக்கு இத்திரைப்படம் காட்டப்பட்டபோது, இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு கூறினார்.
இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனமான RAI வெளியிடவிருக்கும் இந்த முப்பரிமாணத் திரைப்படம் 22 நிமிடங்கள் ஓடக்கூடியது. இத்திரைப்படம் RAI நிறுவனத்தால் வருகிற ஏப்ரல் முதல் தேதி முதல் திரையிடப்படும்.
RAI தொலைக்காட்சி நிறுவனமும், வத்திக்கானும் இதுவரைத் தொடர்ந்து வந்துள்ள பயணத்தில் இன்னும் பல புதிய கண்டுபிடிப்புக்கள் இன்னும் வெளிவரும் வாய்ப்புக்கள் உள்ளன என்று அருள்தந்தை லொம்பார்தி செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.”

இவ்வாறு வத்திகான் இணையத்தளம் தெரிவித்துள்ளது

Featuring Recent Posts WordPress Widget development by YD