பாவிக்கு இரக்கம். – Mercy to a sinner
ஒரு நாள் பரமபிதா வானதூதர்களைக் கூப்பிட்டு “நீங்கள் உலகிற்குச் சென்று எனக்கு மிகவும் பிரியமான பொருள் எதுவென்று கண்டுபிடித்துக் கொண்டுவாருங்கள்”என்று அனுப்பி வைத்தார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்று ஒவ்வொரு பொருட்களைக் கொண்டு வந்தனர்.ஒரு வானதூதர் அழகான கோயிலைக் கொண்டு வந்தார்.மற்றவர் ஓர் அழகான றோஜா மலரைக் கொண்டு வந்தார்.இன்னொருவர் அன்று திருமுழுக்கு பெற்ற குழந்தையைக் கொண்டு வந்தார்.இது போன்று பலர் பல அரிய பொருட்களைக் கொண்டு வந்தனர்.ஆனால் பரமபிதா “இவை யாவற்றையும் விட அழகுள்ளதும் தனக்குப் பிரியமானதும் வேறு உண்டு” என்று கூறினார்.இறுதியாக,ஒரு வானதூதர் ஒரு கோவிலினுள் சென்றார்.பாவங்களை நினைத்து “கடவுளின் அன்பை நான் நிராகரித்து அவருக்கு எதிராய் பாவம் செய்துவிட்டேன்”என்று ஒருவன் அழுது கொண்டிருந்த்தான்.அந்தக் கண்ணீரில் சில துளிகளை பிடித்துக் கொண்டுவந்து வானதூதர்,தந்தை கடவுளிடம் கொடுத்தார்.பரமபிதா இக்கண்ணீரை வானதூதர்களுக்குக் காட்டி”உலகிலே விலை உயர்ந்த பொருள்,மனஸ்தாபக் கண்ணீரே”என்று கூறினார்.மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட,மனந்திரும்பும் ஒரு
பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





