தேவதாய் கேட்டு இயேசு மறுப்பாரோ? Jesus always answer the request of His Mother

Jesus Miracle Wedding at Cana
No Gravatar

தேவதாய் கேட்டு இயேசு மறுப்பாரோ?

கானாவூர் திருமணம், யோவான் 2:1-12

யோவான் நற்செய்தியில், கானாவூர் திருமணத்திற்கு இயேசுவும் அவரது தாய் மரியாவும், சீடர்களும் அழைக்கப்பெற்றிருந்தனர். திருமண விருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அங்கே இரசம் தீர்ந்து விட்டது. இந்த நிலையில் அங்கே வரும் விருந்தினருக்கு இரசம் பரிமாறப்படவில்லை என்றால் அது அந்த குடும்பத்திற்கு ஒரு பெரிய அவமானம்.

தேவதாய் அந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். தேவதாய் அடுத்தவர் மட்டில் இயல்பாகவே கருசனையும், அக்கறையும் கொண்டவர். அக்குடும்பத்தின் துன்பமான வேளையில் தம்முடையை மகனான இயேசுவிடம் அக்குடும்பத்தின் தேவைக்காகப் பரிந்து பேசுகிறார்.

மகனே

மகனே இரசம் தீர்ந்துவிட்டது என்று இயேசுவிடம் தேவதாயார் கூறியபோது, இயேசு கூறிய பதில்

“அதை ஏன் என்னிடம் கூறுகின்றீர்கள், எனது நேரம் இன்னும் வரவில்லையே”

வேதாகமதில் இயேசு குறித்த நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.

அதனால்தான் தன்னுடைய நேரம் இன்னும் வரவில்லை என்று கூறுகின்றார்.

ஆனாலும் இயேசுவிற்கு தன் தாயினுடைய சொல்லை மறுதலிக்க முடியவில்லை.
“எனது நேரம் இன்னும் வரவில்லை” என்று தெரிந்திருந்தும், அதைச் சொன்னாலும், தாயின் வேண்டுதலை ஏற்று அதை நிரைவேற்றுகின்றார்.

குழந்தைப் பருவம் தொடங்கி, தந்தையின் திருவுளத்தை இயேசுவிற்கு கற்றுக்கொடுத்ததே இந்த தேவ அன்னைதான். எனவேதான் இயேசுவிற்குத் தெரியும், தனது தாய் எதைக் கேட்டாலும், எதை சொன்னாலும் அது கடவுளின் திருவுளத்திற்கு ஏற்றதாகவே அமைந்திருக்கும்.

என்னென்றால் நம் எல்லோரையும் விட கடவுளின் திருவுளத்தை நன்கு புரிந்துகொண்டவள் நமது தேவ அன்னை.

அதன் நிமித்தம் தண்ணீரை இரசமாக்கி அந்தக் குடும்பத்தின் துன்பத்தைத் துடைக்கிறார்.

இது எவ்வாறு நிகழ்ந்து?

அடுத்தவர் மட்டில் தேவதாயார் வைத்த அக்கறையும் கரிசனையும் இயேசுவிடம் பரிந்து பேச வைத்தது. தன் தாயின் பரிந்துரையை ஏற்று இயேசு அதை நிறைவேற்றுகின்றார்.

இது வேதாகமதில் நமக்குக் கொடுக்கப்பட்ட நிகழ்வு.

எனவேதான் எமது துன்பமான நேரத்தில் எமக்காகப் பரிந்து பேச எமக்கு ஒரு அன்னை இருக்கிறார் எனபதை நாம் மறக்கக் கூடாது எனபதற்காக யோவான் நற்செய்தியில் எமக்கு இது குறிப்பிடப்பட்டுள்ளது.

நாமும் அந்த அன்னை எமக்காகப் தமது திருக்குமாரனிடம் பரிந்துபேசவேண்டும் என்று கேட்பதில் எந்தத் தப்பும் இல்லை. ஏனென்றால் தமது நேரம் வராவிட்டாலும் , தமது தாயின் தாயின் பரிந்துரை எப்போதும் இயேசுவிற்கு முக்கியம்.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD