இறைவனின் வொயிஸ் மெயிலும், வாடிக்கையாளரின் சேவையும். – heavenly voice mail and customer service
வொயிஸ் மெயில் என்பது இன்று எல்லோராலும் செல்போன்களில் பாவிக்கப்படுகிற ஒரு விடயம்.
அதேபோன்று வாடிக்கையாளர்கள் சேவை என்பதும் இன்று நடைமுறையில் இருக்கும் விடயம்.
நாம் கடவுளின் வாடிக்கையாளர் சேவையில் பங்கு பற்றினால் எப்படி இருக்கும்.?
பரலோகத்திற்கு அழைத்தமைக்காக நன்றி.
ஆங்கிலத்தில் தொடர 1 அழுத்தவும்.
சிங்களத்தில் தொடர 2 அழுத்தவும்.
தமிழில் தொடர 3 அழுத்தவும்.
ஏனைய விடயங்களுக்கு 4 அழுத்தவும்
தயவு செய்து எதாவது ஒன்றைத் தெரியவும்.
தேவைக்காக 1 அழுத்தவும்.
நன்றி செலுத்த 2 அழுத்தவும்.
முறைப்பாடுகளுக்கு 3 அழுத்தவும்.
ஏனைய விடயங்களுக்கு 4 அழுத்தவும்.
அனைத்து சம்மனசுகளும், புனிதர்களும், பாவிகளுக்கு உதவி செய்வதில் தற்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து சம்மனசு அல்லது புனிதர் ஒருவர் வரும்வரையில் தொடர்பில் காத்திருக்கவும்.
அல்லது,
கடவுளுடன் பேச 1 அழுத்தவும்.
இயேசுவுடன் பேச 2 அழுத்தவும்.
பரிசுத்த ஆவியுடன் பேச 3 அழுத்தவும்.
மோட்சத்தில் இருக்கும் உங்களின் அன்புக்கு உரியவருடன் பேச விரும்பினால் 5 அழுத்தவும்.
அங்கு இல்லை என்ற செய்தி கிடைத்தால் தொடர்பை துண்டித்து 666 என்ற கோட் இலக்கத்தை அழுத்தவும்.
மோட்சத்தில் ஏற்கனவே இடம் ஆயத்தப்படுத்த வேண்டும் என்றால் , யோவான் 3:16 அழுத்தவும்.
எமது கணணியின் தரவுப் படி இன்று நீங்கள் செபித்துவிட்டீர்கள். தயவு செய்து தொடர்பை துண்டித்து மீண்டும் நாளை அழைப்பை ஏற்படுத்தவும்.
சமய கடமைகளுக்காகவும், விடுமுறைக்காகவும், இன்று எமது காரியாலயம் மூடப்படுகிறது.
உங்களுக்கு ஏதாவது உடனடி அழைப்பு ஏற்படுத்தும் தேவை ஏற்படின் உங்களுக்கு அருகில் உள்ள ஆலய குருவை சந்திக்கவும்.
நன்றி
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





