கடவுளில் நம்பிக்கை வைப்போருக்கு அற்புதம் நடக்கும்- God will do miracles in the lives of faithful

Prayer girl
No Gravatar

மலை உற்சியில் ஒருவன் பயணம் செய்துகொண்டிடுந்தான். அவன் பயணம் செய்துகொண்டிருந்த மலை உற்சிப்பாதையில் இருந்து கீழே பார்த்தால் அது பயங்கரமான பள்ளத்தாக்காக இருந்தது.

அவன் அப்படியே நடந்து செல்லுகின்றபோது தவறி கீழே விழுகிறான். அந்த மலை உற்சியில் இருந்து கீழே விழுந்து கொண்டிருக்கும்போது ஒரு மரத்திற்கு மேலே விழுந்து அந்த மரத்திலிருந்த ஒரு மரக்கிழையை பிடித்துக்கொள்ளுகிறான்.

மரக்கிழையைப் பிடித்த வண்ணம் கீழேபார்க்கின்றான், அது பெரும் பள்ளமாக இருந்தது. அவனுக்குத் தெரியும் அந்த மரத்தில் இருந்து இனி கையை எடுத்தால் தன் சாவு உறுதி என்பது.

இந்த நேரத்தில்தான் வேறு வழி இல்லாமல், தன் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் இறைவனைப் பார்த்து வேண்டினான்.

“கடவுளே நான் இந்த மலை உச்சியில் இருந்து விழுந்து இந்த மரத்திப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறேன். இதில் இருந்து என்னைக் காப்பாற்ற இனி யாரும் இல்லை. நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும். எப்படியாவது என்னைக் காப்பாற்றும்” என்று வேண்டினான்.

அப்போது விண்ணகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. ” மகனே உன்னுடைய செபத்தை நான் கேட்டுக்கொண்டேன். நீ இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறாய். இருந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன். நான் உன்னை என் கரங்களில் தாங்குவேன். நீ என்னை நம்பி உனது கரத்தை அந்த மரக்கிழையில் இருந்து எடு, அப்போது நான் உன்னைத் தாங்குவேன்.”

அப்போது இவன் சொன்னான் “கடவுளே நீ என்னைப் புதுமை செய்து காத்துக்கொள்ளுவீர் என்று நான் நினைத்தேன். ஆனால் எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கையான இந்த மரக்கிழையையும் நீர் விடச் சொல்லுகிறீர்.இந்த மரக்கிழையைவிட்டு நான் சாவதற்கு நான் ஒரு முட்டாள் அல்ல. விருப்பமென்றால் புதிமை செய்து என்னைக் காத்துக்கொள்ளும்” என்று கூறுனான்.

அதற்கு கடவுள் ” நீ என்னை நம்பினால் நான் உன்னை வாழ வைப்பேன், நீயே முடிவு செய்” என்றார்.

நமது வாழ்வில் கடவுளின் அதிசயங்களையும் , அற்புதங்களையும் நாம் காணவேண்டும் என்றால், ஏற்கனவே பல்வேறு இடங்களில் இருக்கிற எங்களின் நம்பிக்கையை எடுத்துவிட்டு கடவுளிலே நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். அப்படி வைத்தால் கடவுள் நம் வாழ்வில் அற்புதங்கள் செய்வார்.

என்னிடமும் , உங்களிடமும் இறைவன் எதிர்பார்ப்பது எல்லாம் நாம் அவரில் நிபந்தனை அற்ற முறையில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD