பணமே இல்லாமல் வாழ்ந்த யேர்மன் நாட்டு மூதாட்டியார்.- woman lived without money
ஆங்கிலத்திலிருந்த இந்த செய்தியை வாசித்தபோது எனக்கும் ஆச்சரியம்தான். பணம் இல்லாமல் எப்படி இந்த மூதாட்டி வாழ்ந்தார். அப்படி வாழத்தொடங்கிவிட்டால் நிறையப் பிரச்சினை வாழ்வில் மறைந்துவிடும் இல்லையா? மனசுக்கும் நிம்மதி வந்துவிடும்.
பணம் இல்லாமல் ஒரு நாளா? ஒரு வாரமா? ஒரு வருடமா? 16 ஆண்டுகள் பணம் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்.
இம்மூதாட்டியின் பெயர் Heidemarie Schwermer, தற்போது 69 வயது 3 பேரப்பிள்ளைகளைக் கொண்டவர்.
1996 ஆம் ஆண்டில் இவர் ஒரு உளவியலாளராகவும், ஆசிரியராகவும், பணியாற்றியவர். அப்போது இவருக்கு ஒரு வித்தியாசமான ஆசை வந்தது. பணம் இல்லாமல் ஒரு ஆண்டுகள் வாழ வேண்டும் என்பது அந்த ஆசை.
இரண்டாம் உலகப்போரின் போது இவர் ஒரு குழந்தையாக இருந்தவர். ரஷ்சியப் படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பி யேர்மன் வந்து குடியேறியவர். பசி என்றால் என்ன என்று நன்கு அனுபவப்பட்டவர். அதனால் ஏழைகள் மட்டில் இரக்கம் உடையவர்.
பொருட்களையே வாங்கிக் குவிப்பவர்கள், இவரை ஏழனம் செய்தார்கள்.
தொடக்கத்தில் இவருடைய இரண்டு பிள்ளகளுக்கும் இது ஆச்சரியமாக இருந்தது. ஏற்றுக்கொள்ளவும் முடியாது இருந்தது. அதேபோண்றுதான் இவருடைய நண்பர்களும் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவருடைய கருத்துப்படி பணம் இல்லாமல் வாழ்வது என்பது வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தத்தையும், தரத்தையும் உயர்த்துகின்றது என்றும், உள்ளார்ந்த செல்வத்தையும், மனவிடுதலையையும் கொடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் தன்னுடைய இந்த அனுபவத்தைப் பற்றி 3 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
படத்தயாரிப்பாளரான Halvorsen என்பவர் இவருடைய உண்மை வாழ்க்கை அனுபவத்தை ஒரு படமாகத் தயாரிக்க இருக்கிறார்.
கீழே இருக்கிற வீடியோவை பார்த்தால் இன்னும் அதுகமான் அனுபவத்தைக் கேட்கலாம்.
http://shine.yahoo.com/work-money/german-grandmother-lives-money-free-never-happier-173900934.html
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





