First Saturdays Devotion to the Immaculate Heart of Virgin Mary- Read it in Tamil
மாதத்தின் முதல் சனிக்கிழமை தேவதாயில் பக்தி முயற்சி.
தேவதாயின் மேல் தொடர்சிசியாக மாதத்தின் முதல் ஐந்து சனிக்கிழமைகளில் இப்பக்ட்தி முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேவதாயார் தனது பல காட்சிகளில் கேட்டுக்கொண்டுள்ளார். இவற்றில் குறிப்பாக பாத்திமா நகரில் 1917 ஆம் அண்டில் லூசியா யசிந்தா பிரான்சிஸ் ஆகிய மூவருக்கும் அன்னை மரியாள் கொடுத்த காட்சியில் மாதத்தின் தொடக்கத்தில் வருகின்ற ஐந்து முதல் சனிக்கிழமைகளிலும் இப்பக்தி முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
1925 ஆம் ஆண்டில் தேவதாயார் இயேசுவுடன் இணைந்து லூசியாவிற்கு கொடுத்த காட்சியில் தனது தாயாருடைய இதயம் மனிதருடைய நன்றி இல்லா தன்மையினால் செய்கின்ற பாவத்தினால் முட்களினால் குத்தப்படுகிறது என்று கூறினார்.
இதற்குப் பரிகாரமாக இந்த முதற் சனிக்கிழமை பக்தியானது மக்களினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
தேவதாயாருடைய நிபந்தனை.
தொடர்சியாக வருகின்ற மாதத்தின் முதல் ஐந்து சனிக்கிழமைகளிலும் இப்பக்தி முயற்சிகளை மேற்கொள்வோரை அவர்களுடைய மரண நேரத்தில் தான் விண்ணகம் கொண்டுபோய்ச் சேர்பதாக வாக்குக்கொடுத்திருக்கின்றார்.
இப்பக்தி முயற்சியில் என்ன செய்ய வேண்டும்?
1. நல்ல பாவசன்கீதனம் செய்ய வேண்டும்.
2. நற்கருணை உட்கொள்ளவேண்டும்
3. திருச்செபமாலை சொல்லவேண்டும்
4. பாவத்திற்குப் பரிகாரமாக 15 காரணிக்கத்தையும் தியானிக்க வேண்டும்.
ஏன் ஐந்து தொடர்சியான சனிக்கிழமைகள்?
இந்த முக்கியமான பக்தி முயர்சியானது 5 விதமான பாவத்திற்கு பரிகாரமாக கேக்கப்பட்டுள்ளது
1. தேவமாதாவின் மாசில்லா உற்பவத்திற்கு எதிரான பாவத்திற்கு பரிகாரமாக.
2. தேவதாயாரின் கன்னிமைக்கு எதிரான பாவத்திற்கு பரிகாரமாக.
3. தேவதாயார் கடவுளின் தாய் என்று ஏற்றுக்கொள்ளாத பாவத்திற்கு பரிகாரமாக.
4. குழந்தைகளின் உள்ளத்தில் தேவதாயாரைப் பற்றி அவதூறாகக் கற்றுக்கொடுக்கிற பாவத்திற்கு பரிகாரமாக.
5. தேவதாயாரின் திருச்சுருபங்களை நேரடியாக பழித்துரைப்பவர்களின் பாவத்திற்கு பரிகாரமாக.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





