Divine Mercy in Tamil

HYLA IMAGE BY  KATHLEEN  WEBER
No Gravatar

முன்னுரை:

உலக ஆரம்பத்திலிருந்தே இறைவன் மக்கள் மீது தாம் கொண்டுள்ள இரக்கதை;தை வெளிப்படுத்திவந்துள்ளார். பழைய ஏற்பாடு வரலாற்று நிகழ்சிகள் மூலமும் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துநாதர் மூலமும் இறைவனின் இரக்கம் வெளிப்படுகின்றது. ஆண்டவரை அன்புசெய்கிறவர்களுக்கு அவரது இரக்கம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதென்று வேதாய் தனது கீதத்தில் கூறுகிறார்.

சமீப காலத்தில் பாவிகளுக்குத் தமது நித்திய அன்பின் புதுத் தன்மைகளை அறிவித்து இறைஇரக்கத்தின் பக்தியை ஏற்படுத்த ஆண்டவர் பல அடியார்களுக்கு காட்சி தந்துள்ளார். இந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் சகோதரி தெரேசாள்( இறப்பு 1897) சகோதரி பெனினா கோண்சொலாட்டா ( இறப்பு 1916) சகோதரி சோபிய மென்டஸ் ( இறப்பு 1923) சகோதரி மரிய பவுஸ்தீனா கோவல்ஸ்கா (இறப்பு 1938) சகோதரி பெத்ரோன் (இறப்பு 1946) ஆகியோராவர். இறை இரக்கத்தின் பக்தியைப் பரப்பும் பணி சகோதரி பவுஸ்தீனாவிடம் விஷேசமாக அளிக்கப்பட்டது.

தூய மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா

மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா 1905 ஆம் வருடம் ஆகஸ்டு 25 ஆம் நாள் போலந்து நாட்டில் லோட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். அவர் கன்னியர் மடத்தில் சேர விரும்பியும் பெற்றோர் மும்முறை அனுமதி மறுத்துவிட்டனர். இருதியாக தனது 20ஆம் வயதில் தேவதாயின் இரக்கத்தின் சகோதரிகள் சபையில் சேர்ந்தார்கள். வார்சாவில் தவசன்னியாசத்தை முடித்து 1928ல் முதல் வார்த்தைப்பாடும் கொடுத்கார்கள். போலந்திலுள்ள பல மடங்களில் தன் படிப்பு குறைவு (மூன்றாம் வகுப்பு வரை) காரணமாக பல தாழ்ந்த வேலைகளைச் செய்து மறைந்த வாழ்வு வாழ்ந்து வந்தார்கள்.

இரக்கத்தின் அரசரான இயேசு இவருக்குப் பலமுறை காட்சி தந்தார். இக்காட்சிகள் 1930லிருந்து 1938 வரை நீடித்தன. இறை இரக்கத்தின் பக்தியை குறித்து இயேசு அவருக்கு பல அறிவுரைகள் கூறினர். தமது வார்த்தைகளை பவுஸ்தீனா அவர்களின் கையேட்டில் எழுதிக்கொள்ளுமாறு பணித்தார். அவர்களது 600 பக்கங்களை கொண்ட நாட்குறிப்பிலிருந்தே இக்காட்சிகள் பற்றிய பல தகவல்களை அறியக்கூடியதாய்இருக்கிறது. ஏனெனில் தமது ஆன்ம குருவையும் மடத் தலைவியையும் தவிர வேறொருவருக்கும் அவர் காட்சிகள் பற்றிய செய்தியை அறிவிக்கவில்லை. இந்த நாள் குறிப்புகள் ஆங்கிலää இத்தாலியää ஜெர்மன்ää இஸ்பானியää பிரஞ்சுää அரேபியää ரஷ்யää ரூமேனியää செக்ää ஸ்லோவாக்கியää மலையாளம்ää கன்னடää தெலுங்குää ஹிந்திää தமிழ் இன்னும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சகோதரி மரிய பவுஸ்தீனா சயரோக நோயால் பாதிக்கப்பட்டு மிகத் துன்புற்றார். தன்னுடைய துன்பங்களை பாவிகளுக்காக ஒப்புக்கொடுத்தார். தமது 33ஆம் வயதில் கிராக்கோ எனும் ஊரில் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் இறைவனடி சேர்ந்தார். 1966ம் ஆண்டு அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு மடத்துக் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அப்போது போலந்தில் கருதினாலாக இருந்த கரோல் வைத்தீவோ (பின்நாளில் திருத்தைந்தை 2 ஜான் பவுல்) 1968ல் முத்தப் பேறுபட்டத்திற்கான அலுவலை ஆரம்பிக்க அனுமதி வழங்கினார். 1993 ஏப்பல் 18ஆம் நாள் திருத்தைந்தை 2 ஜான் பவுல் முத்திப்பேறுபெற்றவர் என அறிவித்தார். பின்னர் 2000 ஆண்டு ஏப்ரல் 30 நாள் திருத்தைந்தை 2 ஜான் பவுல்ää சகோதரி மரிய பவுஸ்தினாவை “புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா” வாக அறிவித்தார்.

கடவுள் எல்லாரையும் அன்புசெய்கிறார். நாம் எவ்வளவு பெரும் பாவியாக இருந்தாலும் அவரது அளவிடமுடியாத இரக்கத்தில் நம்பிக்கை வைத்து அவரை நாடி நம் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரும்போது கடவுளின் அளவிடமுடியாத இரக்கம் நம்மீது பாய்தோடி வரும். பாவியின் சீர்கேடு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு இரக்கத்தை பெறும் உரிமையும் அதிகமாக உள்ளது. ஆழம் காண முடியாத எனது இரக்கத்தில் நம்பிக்கை வைக்க எல்லா ஆன்மாக்களுக்கும் அழைப்பு விடுää எனெனில் எல்லாரையும் மீட்க நான் விரும்புகிறேன். எல்லா ஆன்மாக்களுக்காகவும் சிலுவை மரத்தில் ஈட்டியால் குத்தி திறக்கப்பட்டுள்ளது எனது இரக்கத்தின் ஊற்று. நான் யாரையும் ஒதுக்கி விடுவது இல்லை. என் இரக்கத்தை நீங்கள் பெற்றது போல் நீங்களும் பிறருடன் இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள். நான் மன்னிப்பதுபோல் பிறர் குற்றங்களை நீங்களும் மன்னியுங்கள். பாவத்தில் வீழ்ந்துகிடக்கும் ஆன்மாக்களை இரக்கமுள்ள என் இதயத்தருகே வரும்படி சொல். நான் அமைதியால் நிரப்புவேன். நம்பிக்கையோடு என் இரக்கத்தை நாடி என்னிடம் வருவோருக்கு மீட்பை அள்ளித்தருவேன்.

இறைவனின் இரக்கத்தைப் பெற சிறப்பான வழிகள்:

1.இறை இரக்கத்தின் திருநாள்
2.இறை இரக்கத்தின் ஜெபமாலை
3.இறை இரக்கத்தின் நவநாள்

Continue Here…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD