Category Archives: Interestings

கடவுளுக்கு வெறுப்பானவை எழு

hand-7-seven1-300x300 No Gravatar

நீதிமொழிகள் 6:16

16 ஆண்டவர் வெறுப்பவை ஆறு.
ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது.
17 அவை இறுமாப்புள்ள பார்வை,
பொய்யுரைக்கும் நாவு,
குற்றமில்லாரைக் கொல்லும் கை,
18 சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம்,
தீங்கிழைக்க விரைந்தோடும் கால்,
19 பொய்யுரைக்கும் போலிச்சான்று,
நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.

விதைகள்….

seed-life-300x240 No Gravatar

நன்றாக வியாபாரத்திலும் வாழ்க்கையிலும் வெற்றியடைந்த பழமை வாய்ந்த ஒரு வர்த்தகர் தன்னுடைய வயதான நிலையை மனதில் கொண்டு தன்னுடைய இடத்திற்கு இன்னுமொரு வெற்றியாளரை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற முயற்ச்சியில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

மோட்சத்திற்கு சென்ற மனிதன்….

Heaven No Gravatar

ஒரு நாள் ஒரு மனிதன் இறந்தான். அவன் தன் வாழ்நாளில் செய்த நன்மைத்தனம் காரணமாக மோட்சத்திற்கு செல்லப்பட்டார்.
மோட்டசத்தின் வாயிலில் புனித பேதுரு நின்றுக் கொண்டு இவரை வரவேற்றார்.
புனித பேதுரு இவரிடம் “மோட்சத்திற்கு உன்னை அன்போடு அழைக்கின்றேன். ஏனெனில் நீ மண்ணுலகில் அனைவருக்கும் ஏற்றவாறு நல்வாழ்க்கை வாழ்ந்துள்ளாய். ஆகவே இன்று நீ மோட்சத்திற்கு அழைக்கப்பட்டிருக்கின்றாய்” என்றார். மேலும், அவர் “உனக்கு விருப்பமானால் நீ சென்று முதலில் நரகத்தை பார்வையிட்டு வரலாம்” என்று கூறினார். அம்மனிதனும் மிகவும் ஆவலுடன் கண்டிப்பாக நான்
நரகத்தை பார்வையிட வேண்டும் என்று கூறி, நரகத்தை பார்வையிடச் சென்றார்.

நரகத்தின் எல்லா படிகளையும் தாண்டி நரகத்தின் வாயிலை அடைந்ததும் நரகத்தின் கதவு அவர் முன் திறக்கப்பட்டது. அப்போது அவர் கதவின் உட்புறத்தில் ஏராளமான மக்கள் மேசையை சுற்றி அமர்ந்திருப்பதையும் அம்மேசையில் மிகவும் சுவையுள்ள உணவு வகைகள் இருப்பதையும் கண்டார். ஆனால் அங்கிருந்த அனைத்து மக்களும் கண்ணீருடனும், வேதனையுடனும், சோகத்துடனும் காணப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் கைகளுக்கு பதிலாக நீண்ட கத்தியும், முள்கரண்டியுமே உடம்பில் காணப்பட்டது. இதனால் அவர்களால் தங்களுடைய அருமையான உணவை கூட தங்கள் வாயினுள் போட முடியாமல் இருப்பதைக் கண்டார்.

அவர் உடனே மோட்சத்திற்கு சென்று, புனித பேதுருவிடம், “நான் மோட்சத்திற்கு அழைக்கப்பட்டதில் மிக்க பெருமை கொள்கிறேன். ஏனெனில் அவர்களுக்கு உண்மையாகவே அது ஒரு தண்டணையாக அமைந்துள்ளது” என்றார்.

புனித பேதுருவும் நல்வரவேற்புடன் மோட்சத்தின் உள்ளே அம்மனிதனை அழைத்துச் சென்றார்.

அங்கு அவர் என்ன பார்த்திருப்பார்?

அவர் அங்கும் நரகத்தைப் போல் பலவகையான சுவையுள்ள இனிமையான உணவுகளை கொண்ட மேசையை சுற்றி மக்கள் பலர் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

நரகத்தைப் போன்றே மோட்சத்தில் இருந்தவர்களுக்கும் கைகள் இல்லை. மாறாக, நீண்ட கத்தியையும் முள்கரண்டியையுமே தங்கள் கைகளில் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டார்.
ஆனால் மோட்சத்தில் அழுகையோ அங்கலாய்போ காணப்படவில்லை. மாறாக சந்தோஷமே காணப்பட்டது. ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுடைய உணவுகளை ஒருவர் வாயில் ஒருவர் ஊட்டி மகிழ்வதை காண்கின்றார். இவர்கள் நடுவே சிரிப்பும் களிப்புமே இருப்பதைக் கண்டார்.

அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில் மட்டுமே உண்மையான மகிழ்ச்சி உள்ளது.
ஆகவே தன்னலத்தை மறந்து மற்றவர்களில் அக்கறை காட்டுவதில் முதன்மையாய் இருங்கள்.
அப்போது நீங்களும் கடவுளினால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவீர்கள்.

சிறு சிறு விடயங்களும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்

starfish No Gravatar

சிறு சிறு விடயங்களும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்

ஒரு மனிதன் காலையில் நடப்பதற்காக கடற்கரைக்கு சென்றார்.
அவ்வேளையில் கடல் அலைகளுடன் நூற்றுக்கனக்கான
நட்சத்திர வடிவிலான கடற்பிரானிகள்(Starfish) கடல் அலைகளுடன்
அடிபட்டுக் கொண்டிருப்பதை அவதானித்தார்.
கடல் அலைகள் கரையைத் தொடும் போது அப்பிராணிகளும்(Starfish) கரையில் ஒதுங்கி காலை சூரிய கதிர்களால் இறப்பதை கண்டார். இதை பார்த்த அம்மனிதன் கரையில் இருந்து இரு அடி முன்னே சென்று ஒவ்வொரு கடற் பிராணிகளையும் (Starfish) கையால் எடுத்து அதை திரும்பவும் தூரமாக கடலில் எரிந்தார். திரும்பவும் ஒரு அடி முன் வைத்து இன்னொரு பிராணியை(Starfish) எடுத்து அதையும்
அவ்வாறே கடலினுள் வீசி எரிந்தார்.

இவர் இப்படி செய்வதை அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்த மற்றொரு நபர், இவர் என்ன செய்கிறார் என்று புரியாமல் அவரைத் தட்டி என்ன செய்கிறீர்? இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட கடற்பிராணிகள் (Starfish) இருக்கின்றன, இவற்றில் எத்தனை பிராணிகளை தான்
உம்மால் காப்பாற்ற இயலும்? இதில் என்ன வித்தியாசம் இருக்கின்றது? என்று கேட்டார்.

ஆனால் அம்மனிதனோ மறுமொழி எதுவும் கூறாமல், இன்னும் இரு அடி முன்னே வைத்து இன்னுமொன்றை பிடித்து அதையும் அவ்வாறே கடலுனுள் வீசி எறிந்து, இது கண்டிப்பாக இவைகளுக்கு ஒரு வித்தியாசமாக இருக்கும் என மறுமொழி அளித்தார்.

இங்கு இம்மனிதன் எதுவிதமான பெரிய விடயமும் செய்யவில்லை. மாறாக, அப்பிராணிகள் இறப்பதை தவிர்த்து அவரால் ஆன ஒரு சிறு முயற்சியை மேற்கொள்கின்றார்.

இதே போன்றே நாமும் எமது வாழ்வில் என்ன வித்தியாசங்களை மேற்கொள்கின்றோம்?
அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி அது எவ்வாறு இச்சமூகத்திற்கு பயனளிக்கின்றது.

இவ்வாறு ஒவ்வொருவரும் சிறு சிறு மாற்றங்களை எமது வாழ்வில் மேற்கொள்ளும் போது அது ஒரு பெரிய மாறுதலாக அமையும் அல்லவா….
ஆகவே சிந்திப்போம்.. சிறு மாற்றங்களை வாழ்வில் கொண்டு வர முயற்சிப்போம்…

என் வாழ்வில் யேசுவே எந்நாளும் …. பாடல்

sacredheartjesus No Gravatar

Featuring Recent Posts WordPress Widget development by YD