எம்மில் எத்தனை பேர் கடவுள் எம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்கிறோம்? ஏன்? Do we really search for God?
ஏன் கடவுள் எம்மை ஆசீர்வதிக்க வேண்டும்?
எம்மில் எத்தனை பேர் கடவுள் எம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்கிறோம்? ஏன்?
ஆனால் நாம் எல்லோரும் இறைவனின் ஆசிரைப் பெற மன்றாடிச் செபிக்கவேண்டும் என்று வேதாகமத்தில் 1 குறிப்பேடு 4:10 வசனம் கூறுகின்றது.
“யாபேசு இஸ்ராயலரின் கடவுளை நோக்கி, “கடவுளே மெய்யாகவே நீ எனக்கு ஆசீர் வழங்கி, என் எல்லையைப் பெரிதாக்குவிராக, உம் கை என்னோடு இருப்பதாக, தீங்கு என்னைத் துன்புறுத்தாது எனக்கு பாதுகாப்பு அருள்வீராக.” எனவே எல்லோரும் இறைவனின் ஆசீரைப் பெற மன்றாடவேண்டும்.
இறைவன் ஏன் நமக்கு ஆசீர் வழங்குகின்றார் என்பதை திருப்பாடல் கூறுகின்றது.
திருப்பாடல் 67 இறைவனின் ஆசீரைப்பற்றிக் கூறுகின்றது.
திருப்பாடல் 67 முதல் இரண்டு வரிகளையும் நோக்கினால், அதனுடைய பொருள் விளங்கும்.
1.”கடவுளே எம்மீது இரங்கி எமக்கு ஆசீர் வழங்குவிராக, உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவாராக”
2 ” அப்போது உலகம் உமது வழியை அறிந்து கொள்ளும். பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர்.”
திருப்பாடலில் ஆசீர் வேண்டியதன் நோக்கம் தெளிவாகக் கூறப்படுகின்றது.
இறைவனின் வல்லமையை அடுத்தவர்கு வெளிப்படுத்த,
இறைவனின் அன்பை அடுத்தவருக்கு உணர்த்த,
அவருடைய நன்மையை எல்லா இனத்தவருக்கும் பறை சாற்ற,
அதேபோன்று பலவிடயங்கள்
திருப்பாடலில் கூறப்படவில்லை,
என்னை ஆசீர்வதியும் அதனால் நான் சவுகரியமாய் இருப்பேன் என்று.
என்னை ஆசீர்வதியும் அதனால் நான் கடினமாக உழைக்காமல் இருப்பேன் என்று கூறவில்லை.
என்னை ஆசீர் வதியும் அதனால் அடுத்தவர் மத்தியில் நான் பெருமையாக இருப்பேன் என்று கூறவில்லை.
என்னை ஆசீர் வதியும் அதனால் நான் உலகத்தின் மத்தியில் நான் வெற்றிபெற்றவனாக இருப்பேன் என்று கூறவில்லை.
என்னை ஆசீர் வதியும் அதனால் நான் மற்றவர்களை ஆசீர்வதிப்பேன் என்றும் கூறவில்லை.
இவ்வளவும் இல்லை என்றால் ஏன் எம்மை கடவும் ஆசீர்வதிக்கவேண்டும்?
கடவுள் எம்மை ஆசீர்வதிப்பதற்கு முக்கியமான நோக்கம் இருக்கிறது. அது என்ன என்றால்:
ஒன்று:
கடவுள் எம்மை ஆசீர்வதிப்பதன்மூலம், கடவுளின் பெயர் மகிமைப்படுத்தப்படுகின்றது.
ஆகவேதான் எம்மை ஆசீர்வதிப்பதன்மூலமாக கடவுளின் பெயர் உலகின் கடை எல்லை வரை மகிமைப்படுத்தப்படுகின்றது. அது மாத்திரம் அல்ல கடவுளின் பெயருக்கு உலகின் கடை எல்லைவரை வாழ்வோர் அனைவரும் அஞ்சுவார்களாக.
67:7″ கடவுள் நமக்கு ஆசீர் வழங்குவாராக! உலகின் கடை எல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவார்களாக”
1 அரசர் 8.60 தேவாலயம் கட்டி முடித்த பிற்பாடு சாலமோன் மன்னன் இறைஆசீருகாக வேண்டுகின்றார். அவருடைய இறை ஆசிருடைய நோக்கம், ” 60 . ஆண்டவரே கடவுள், வேறு எவரும் இல்லை என்று உலகின் எல்லா மக்களும் அறிவார்களாக”
மனிதனின் வாழ்வின் உண்மை நோக்கம் என்ன? – மனித வாழ்வின் உன்மை நோக்கம் கடவுளை எப்போதும் மகிமைப்படுத்துவது. அவரில் எப்போது சந்தோசமாக இருப்பது.
கடவுள் எம் தேவைகளை நிறைவேற்ற இருக்கவில்லை. மாறாக நாம் இருப்பது அவரை புகழ்ந்து அவரை மகிமைப்படுத்த.
அதனால்தான் கடவுள் எம்மை ஆசீர்வதிக்கிறார் நாமும் , இந்த உலகமும் , அனைத்தும் அவைரைப் புகழ்வதற்காக.
எனவே கடவுளுக்கு மகிமை கொடுக்காத பொருள் பண்டங்களை நாம் கேட்கக்கூடாது.
கடவுளை மகிமைப் படுத்தக் கூடிய முறையில் நாம் சாட்சிகளாய் இருக்க நாம் வேண்டிக்கொள்வோம்.
முடிவாக இறைவன் எம்மை ஆசீர்வதிக்கிறார் எனென்றால் அதன்மூலம்
1. கடவுளின் பெயர் மகிமைப்படுத்தப் படுகிறது.
2. உலகின் கடைசி எல்லைவரை மக்கள் கடவுளின் பெயருக்கு அஞ்சுவார்கள்
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





