கடவுளின் அழகிய இசை மேடை – Beautiful music God has created in the beginning of the world

Music
No Gravatar

அது  ஒரு  அழகிய பல வாத்தியக்கருவிகள் நிறைந்த ஒரு இசை மேடை. அந்த இசை மேடையிலே ஒரு அழகிய புதுவிதமான இசை ஒன்றை இசைப்பதற்காக அனைத்து முயற்சியும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. எல்லாமே புதிய இசைக் கருவிகள், புதிய மேடை, அனைவரும் புதியவர்கள், அந்த  மேடையைச் சுற்றி இருக்கிற இடமே  அழகானதும், புதுமை நிறைந்த இடமுமாகக் காட்சி  கொடுத்தது.

அந்த மேடையிலே புதிய இசை ஆரம்பமாகிறது. எல்லோரும் அழகாக  அந்த புதிய இசையை இசைத்துக்கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் ஆனந்தம் கொடுக்கக் கூடிய முறையில் அந்த புதிய இசை இருந்தது.

இவ்வாறு அந்த புதிய இசை எல்லோருக்கும் ஆனந்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையிலே,  திடீரெனெ, யாரோ ஒருவர் தப்பான ஒரு முறையில் இசையை வாசிக்கும்போது, அந்த ஆனந்தமான இசை குழம்புகின்றது. திடீரெனெ எல்லாமே நிற்கின்றது. எங்கும் அமைதி, எல்லாமே நிசப்பமாக இருக்கிறது. யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அழகிய இசை சில நிமிடங்களிலே அடங்கி விடுகின்றது.

இந்த வேளையில்தான் அந்த இசையை  உருவாக்கியவர், இடைப்பட்ட அந்த இசையை அப்படியே இடை நிறுத்தவில்லை. அல்லது மீண்டும் முதலில் இருந்து அந்த இசையை இசைக்க முற்படவில்லை.

மாறாக எந்த இடத்தில் அந்த அழகிய இசை குழம்பியதோ, அந்த குழம்பிய இடத்திலிருந்து ஒரு புதிய இசையை உருவாகினான். இப்போது இசைக்கப்படுகுன்ற இசை யாருமே எதிர்பாராத புதிய மனங்களுக்கு ஆறுதல் கொடுக்கின்ற இசையாக இருந்தது.

இது புதிய இசை, ஒரு குழப்பத்தின் தொடக்கித்தில் இருந்து  உருவாக்கப்பட்ட இசை.

இதைப் படிக்கும்போது உங்களுக்கு ஒரு ஞாபகம் வந்திருக்கும்.  அது என்ன?

தொடக்கத்தில்  , இறைவன் உலகம் என்னும் அழகிய மேடையை உருவாக்கி, அதில் மனிதனை வைத்து, அழகிய இசை ஒன்றை இசைக்க முற்பட்டார். ஆதாமும், ஏவாளும் இந்த அழகிய இசையை  இசைத்துக் கொண்டிருக்கும்போது, பாவம் என்ற முற்றிலும் பொருந்தாத இசை ஒன்று இசைக்கப்பட்டு அந்த அழகிய இசை குழப்பம் அடைகின்றது.

ஆனால் இறைவன் பாவத்தினால் குழப்பப்பட்ட  அந்த நல்ல இசையை  அத்தோடு இடை நிறுத்தவில்லை. எங்கே அந்த இசை பாவத்தினால் குழப்பப்பட்டதோ ,  அங்கேயே ஒரு புதிய இசையை உருவாக்கிறார். இந்த புதிய இசை இறைவன் உருவாக்கிய கிறிஸ்து என்பவரே. ஆதாம், ஏவாளின் பாவதிலிருந்து உருவாக்கப்பட்ட புதிய இசை கிறிஸ்து, அந்த கிறிஸ்து என்ற இசை இன்றும் அழகாக இசைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

 

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD