Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

 

 

 

     

 

நாங்காம் நிலை   ஆறாம் நிலை

சிலுவைப் பாதை

ஐந்தாம் நிலை

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.

Simion helps

 

விவிலியச் சிந்தனை(லூக்கா 23:26)
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்துää அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார்கள். (மத்தேயு 16:24) பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்துää “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்றார். (மத்தேயு 11:29-30) இயேசுää “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம்ää என் நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! கடின சிலுவையை நீர் சுமந்துசெல்ல சீமோன் என்பவர் துணைசெய்தார். எங்கள் சகோதரர் சகோதரிகளின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டுää அவர்களின் சிலுவைப் பாரத்தைக் குறைத்திட எங்களுக்குத் துணைசெய்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

 

 

 

 

 

Send us your articles : tamilrosary@gmail.com