Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

 

 

 

     

 

எட்டாம் பிரிவு   இரண்டாம் பிரிவு

திருமறைச்சுவடி

பிரிவு 1:
மனித வாழ்க்கையும் கடவுளும்

 

மனிதன் இவ்வுலகில் இன்பமாக வாழ விரும்புகிறான். உண்மையான இன்பத்தை தருபவரும்ää அதற்கு ஊற்றாக இருப்பவரும் கடவுள். எனவே கடவுளை அடைவதால் தான் மனிதன் உண்மையான இன்பத்தைப் பெறமுடியம்.

கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்?
கடவுளை அறிந்து அவருக்கு அன்பு செய்து அவர் பொருட்டு எல்லா மனிதருக்கும் அன்;பு செய்து வாழ்ந்தால் கடவுளை அடையலாம்.

கடவுளை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
படைப்புப் பொருட்களைப் பார்த்து படைத்தவரை அறிந்து கொள்ள முடியும். மேலும் கடவுள் தம்மையே நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

கடவுளுக்கு நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
ஏனெனில் கடவுள் நம்மை படைத்துக் காத்துவரும் தந்தை.நாம் அவருடைய பிள்ளைகள். ஆகவே நாம் அவருக்கு அன்பு செய்ய வேண்டும்.

கடவுளுக்கு நாம் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
அவர் விருப்பப்படி வாழ்வதால் நாம் அவருக்கு அன்பு செய்ய வேண்டும்.

கடவுள் விரும்புவது என்ன?
தம் சட்டத்தின்படி நம் மனசாட்சிக்கேற்ப நாம் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.

எல்லா மனிதர்களுக்கும் நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்ää எனவே அனைவரும் சகோதரர்கள்ää ஆகவே நாம் ஒருவருக்கொருவா அன்பு செய்ய வேண்டும்.

நாம் பிறர்க்கு எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?
இயேசு கிறிஸ்து நமக்கு அன்பு செய்தது போல நாமும் பிறர்க்கு அன்பு செய்ய வேண்டும்.

 

 

 

 

 

 

Send us your articles : tamilrosary@gmail.com