இறைவா........உன் ஏற்றுக்கொள்ளலில்
நான் மலர்ந்தேன்.........
காலங்கள் கடந்து செல்லத் தேய்ந்து போகும்
ஏற்றுக்கொள்ளல் அல்ல உனது...
மீண்டும் மீண்டும் மூச்சாய் வளரும்
பச்சை வாழைக்குட்டி போன்றது.......
அன்பு என்றால் ஏற்றுக் கொள்ளல் என்பதற்கு
உன்னைத் தவிர எனக்கு வேறு எவரையும்
நினைக்க முடிவதில்லை.............
என்னை ஏற்று அன்பு செய்ய
உன்னால் எப்படி முடிகின்றதென்பது
எனக்கு இன்னும் முழுமையாக
விடை காணாப் புதிர் தான்.......
என் குறைகளோடு என்னை நீ ஏற்று
அன்பு செய்வதனாலேயே என்மீது
உனக்குள்ள அன்பின் ஆழத்தைக் கண்டேன்.........
உன் அன்பு உண்மையானதென நம்புகிறேன்.
என் குறைகளைக் கண்டு தூற்றியவர்கள்,
தூரச் சென்றவர்களை விட - நீ
என்னை ஏற்றுப் பொறுமையோடு
அன்பு செய்ததாலேயே நான் உன்னை
என் உயிராய் கருதுகிறேன்..........
என் குறைகளை ஏற்று நீ எனக்காக
பொறுமை காத்த போது........
உன் அன்பை எண்ணி வியந்து
நான் மாற வேண்டும் என்று
தினமும் முனைந்தேன்......
உன் ஏற்றுக்கொள்ளலில் நான் வளர்ந்தேன்............
என்னால் முயன்றும் மாற்ற முடியாத
ஆனால் பாரதூரமில்லாத குறைகளை
நீ எனக்காக மன்னித்து விட்டு விடுகின்றாய்.......
என் வளர்ச்சிக்கு தடையான குறைகளை தகர்த்தெறிய
எனக்கு தொடர்ந்தும் சவால் விட்டுக் கொண்டேயிருக்கிறாய்.......
நான் நல்ல ஆளாக மாற எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும்
நீ தளராத ஆதரவு தருகின்றாய்........
முயற்சியில் தவறி விழும் போதோ சலித்து விடாது
அன்போடு அரவணைத்து மீண்டும் முயற்சிக்க உந்துகின்றாய்
என்னை நீ என்றுமே தூற்றி விரட்டியதில்லை.........
நான் குறையுள்ள ஆள் என்பதற்காக ஒருநாள் கூட
என்னை நீ அவமானப்படுத்தியது கிடையாது........
என்னை விட்டு விலகிப் போனதும் கிடையாது.......
உன் நிபந்தனையற்ற அன்பை நான் தினமும்
உணர்ந்து நிற்கின்றேன்................
முகத்தில் குத்தும் பிள்ளையையும்
மார்போடணைத்து முத்தமிடும் தாயின் அன்பு உன் அன்பு.......
நான் தவறிழைத்தாலும் விரைந்து மன்னிக்கும் உன் உத்தம
இதயம்..........!
ஒ.... நீ அன்பில் ஒர் ஆகாயம்...!!
என்மீது உனக்குள்ள அளவுகடந்த அன்பும் அக்கறையும்,
உன்னால் என்னுள் உயரும் ஆன்மீகப் பண்புகளும்,
உன் அன்பு கலந்த கண்டிப்பும்.......
உன்னை நான் ஏற்றுக் கொள்ள வைக்கும் உந்துசக்திகள்.........
நான் தரும் வேதனைகளை விட நான் செய்த
நன்மைகளை நினைக்கின்றாய்...............
என்னிலுள்ள குறைகளை விட என்னிலுள்ள
நல்லவைகளையே நினைக்கின்றாய்..................
என்னை உன் பிள்ளையாக என்றும்
என்னைக் காக்கின்றாய்.................
இறைவா...!! உன் ஏற்றுக் கொள்ளலினால் தான்
என்னை நான் உணர்ந்தேன்...........
இல்லையேல்............
என்னை நானே வெறுத்து அழிந்திருப்பேன்......
மனச்சோர்விலும் குற்ற உணர்விலும் மாண்டிருப்பேன்.....
விரக்தியிலும் வேதனையிலும் துவண்டிருப்பேன்....
என்னை புதிய மனிதனாய் மலர வைக்கும் உனக்கு
நன்றிகள் கோடி.............
.........................................