மானிடா !!
மகத்தானது....
மயக்கமானது.....
மாயையானது....
மறைபொருளானது.....
காலை தோன்றி மாலை மறையும்
மலர் போன்றது - மானிடவாழ்வு
உன்
பலங்களைக் கண்டு கொள்....
பலவீனங்களை தெரிந்து கொள்....
உனதென ஏற்றுக் கொள்....
பிழைகளை திருத்திக் கொள்.......
தவறுக்கு வருந்திக் கொள்....
அங்கிருந்து எழுந்து கொள்......
மற்றவர்களை அவ்வாறே
ஏற்றுக் கொள்....
தனித்துவம் பேண
வழிசெய்து கொள்.....
வழிமாறும் போது
வழி காட்டிக் கொள்......
சரிவுகளை ஏற்றுகொள்.......
ஏழ்மையை ஏற்றுக் கொள்........
சரியானதை
அறிந்து கொள் மானிடா.......
தெரிந்து கொள் மானிடா...........
ஏற்றுக்கொள் மானிடா.........
மாற்றிக் கொள் மானிடா.........
முயற்சி கொள் மானிடா.....
வளர்ச்சி கொள் மானிடா....
மனிதம் முழுமை பெறக்
காண்பாய்...........................