Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

 

Previous Peace

அமைதி அன்று......
ஆவேசம் இன்று.....!!!

அமைதியாய் வாழ்ந்தான் அன்று................
ஆவேசமாய் வாழ்கிறான் இன்று........

ஒற்றுமையை ஓம்பினான் அன்று.....................
வேற்றுமையை வேண்டுகிறான் இன்று....

சமாதானத்தை மதித்தான் அன்று...................
சமாதானத்தை மிதிக்கிறான் இன்று.......

பண்புக்கு முதலிடம் அன்று.....................
பணத்துக்கு முதலிடம் இன்று.........

ஏழைக்கு வழங்கினான் அன்று....................
ஏழையை விழுங்குகிறான் இன்று......

பாசத்தை வளர்த்தான் அன்று......................
பாவத்தை வளர்க்கிறான் இன்று.........

மதத்தால் இறைவனைக் கண்டான் அன்று................
மதத்தால் இடர்களை வளர்க்கிறான் இன்று......

சமயத்தால் சாந்தம் பெற்றான் அன்று..............................
சமயத்தால் சண்டைகள் செய்கிறான் இன்று...........

ஆக்கத்துக்கு அறிவை வளர்த்தான் அன்று....................
அழிவுக்கு அறிவை வளர்க்கிறான் இன்று.............

அன்றைய அமைதி எங்கே? மனிதா?......?
இன்றைய ஆவேசம் ஏனோ? மனிதா?........?

.................................

உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்

HTML Comment Box is loading comments...

tamilrosary@gmail.com