விசுவாசம் சோதித்து அறியப்படும் ஒன்று. சோதித்து அறியப்படாதவரைக்கும் விவாசத்தை யாரும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது, அறியப்படாதவரைக்கும் அதை விசுவாசம் என்று சொல்ல முடியாது. விசுவாசம், அது எந்த விசுவாசம்?, யாரில் இருக்க வேண்டும்? அல்லது எதில் இருக்க வேண்டும்? இது கேள்வி. விசுவாசம் ஆழப்படுத்தப்பட வேண்டும். எதில் அல்லது யாரில்? விசுவாசம் பல கோணங்களில் இருக்கிறது, பல படிமுறைகளில் இருக்கிறது. பொதுவாக நாம் விசுவாசம் என்று பேசும்போது நம் எண்ணங்களில் வருவது கடவுளில் விசுவாசம் என்பது. ஆனால் அது மாத்திடரம் அல்ல. விசுவாசம் என்பது என் மனதில் உருவாகி, பூமியை நிறைத்து, வானத்திலே நங்கூரம் இடுவது. இது விசுவாசம் என்ற புண்ணியத்திற்கு மாத்திரம் அல்ல. எந்தப் புண்ணியத்தை எடுத்தாலும் இது பொருந்தும். அது அன்பாக இருந்தாலு சரிதான், மன்னிப்பாக இருந்தாலும் சரிதான், பகிர்வாக இருந்தாலும் சரிதான். எதுவாக இருந்தாலும் பொருந்தும். நீ உன்னை நம்பு - முடியுமானவரை வாழ்க்கை என்பது ஒரு களம், அங்கேதான் விசுவாசம் சோதிக்கப்படுகிறது. வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் பரீட்சை இருக்கிறது. அது விசுவாசத்திற்கும் பொருந்தும். பரீட்சையில் மாணவன் சோதிக்கப்படுகிறான், அறிவை அறிந்து கொள்ள. களத்தில் சோதிக்கப்படுகிறான் வீரத்தை அறிந்து கொள்ள. திறமையை அறிந்து கொள்ள அதே போல விசுவாசத்தில் சோதிக்கப் படுகிறான், விசுவாசத்தை அறிந்துகொள்ள. உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்
HTML Comment Box is loading comments...
Send us your articles : tamilrosary@gmail.com
|
