Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

Previous
forgive me

 

பாவமன்னிப்பு............

பூமியில் பிறந்த நாங்கள்
புண்ணியம் செய்வதை விட்டுவிட்டு
பாவங்களின் பக்கம்
எங்கள் முகங்களையும்
எங்கள் மனங்களையும்
பிணைத்து வைத்திருக்கின்றோம்..
அதிலிருந்து
எங்களை மீட்டெடுப்பாயாக.............!

நாங்கள் பலவீனமானவர்கள்........
ஒன்றும் தெரியாதவர்கள்.......
மாய உலகில் சிக்கியவர்கள்......
வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாதவர்கள்...
நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் - பல
நேரங்களில் தவறிழைக்ககூடியவர்கள் இறைவா.....!

பாவமன்னிப்புக்கேட்டு
தலைகுனிந்து நிற்கிறோம்.....
கைகளை ஏந்திய வண்ணம் நிற்கிறோம்.....
எங்கள் கைகளை
வெறுங்கைகளாக தட்டிவிடாதே!
உன் சந்நிதானத்தில்
சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.......
எங்கள் கோரிக்கைகளையேற்று
எங்களின் பாவங்களை மன்னித்து
எங்களுக்கு நல்லருள் புரிவாயாக......!

எங்களை பாவத்தை விட்டும்..........
கொடியமனிதர்களின் தீங்கைவிட்டும்..........
கொடிய வியாதிகளின் தீங்கைவிட்டும்.........
நேரான பாதையிலிருந்து வழி தவறுவதைவிட்டும்...........
கெட்டவர்களிடம் கூட்டு சேர்வதைவிட்டும்.......

நல்லவர்களிடமிருந்து பிரிவதைவிட்டும்.........
தீயபழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதைவிட்டும்.............
எங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கிழைப்பதைவிட்டும்........
நம்பியவர்களுக்கு துரோகம் செய்வதைவிட்டும்...........

அடுத்தவர்களின் பொருள்களை அபகரிப்பதைவிட்டும்.........
அநியாயங்கள் செய்வதைவிட்டும்........
அத்துமீறிய செயல்களைவிட்டும்.............
எங்களை காப்பாற்றுவாயாக என் இறைவா........!

இப் புனிதமான காலத்தில் இருக்கிறோம்.....
எங்களின் பிராத்தனைகளை ஏற்றுக்கொள்வாயாக...
இக்காலத்தின் பொருட்டால்.....
எங்கள் பிழைகளை மன்னித்தருள்வாயாக........!!!

இக்காலத்தில் பின்பற்றும் நோன்பின் பொருட்டால்
எங்கள் குற்றங்களை மன்னித்தருள்வாயாக!
வணக்கங்களின் பொருட்டால்.....
எங்கள் தவறுகளை மன்னித்தருள்வாயாக.....!

இனி தவறுகளின்; பாவங்களின்; குற்றங்களின்
பக்கமே எங்கள் உடலும்
உள்ளமும் திரும்பிவிடாதவாறு..........
நேரான வழியில் எங்களை நடத்திச்செல்வாயாக
எங்களை பாதுக்காப்பாயாக............!
எங்களை பரிசுத்தப்படுத்துவாயா.....!!

உன்னிடமே உதவி தேடுகிறோம்..........!!
உன்னிடமே எங்களை
மன்னிக்கச் சொல்லி நாடுகின்றோம்........!!
எங்களை மன்னித்து உன் அருளை
எங்கள் மீது பொழிவாயாக இறைவா .......!!

 

உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்

...................................................................................

HTML Comment Box is loading comments...
 

அனுப்பியவருக்கு நன்றிகள்.

வாசிக்கிற நீங்களும் எழுதி இந்த இமெயிலுக்கு அனுப்பலாமே!

 

Send us your articles : tamilrosary@gmail.com