பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவிதப் பறவை இருந்தது. அது அதிசயப் பறவை, அற்புதமான பறவை, அப்பறவை தன் வாழ்வின் இறுதிக்கட்டம் நெருங்கியதும் முட்கள் நிறைந்த ஒரு மரத்தை நோக்கிச் செல்லுமாம். மரத்திலுள்ள கூரிய முட்கள்மேல் அமர்ந்துகொள்ளுமாம். மரத்தின் நீண்ட, கூரிய முட்கள் அந்தப் பறவையைக் குத்தக் குத்த, பறவையின் இரத்தம் சொட்டச் சொட்டாக விழுமாம். அந்நேரத்தில் அப் பறவை கத்தும், கதறும். அது கத்துகிற சத்தம், அது எழுப்புகிற சோக இராகம், அருகிலிருக்கும் மக்களுக்கெல்லாம் இனிமையான இராகமாக இருக்குமாம். பத்துக் குயில்கள் சேர்ந்து பாடினால் எப்படி இருக்குமோ அதேபோன்று இனிமையாக இருக்குமாம். அப்பகுதி வாழ் மக்கள் எல்லாம் அந்த இன்னிசையைக் கேட்டுக் கேட்டு, ரசித்து ரசித்து மகிழ்ந்திருப்பார்களாம். வரலாற்றில் இயேசு பெருமான் என்ற ஒர் அதிசயப் பறவை இருந்தது. அப்பறவை மண்ணில் வாழ்ந்தது. இறுதியில் சிலுவை மரத்தைநோக்கிப் பறந்ததுசென்றது. அச்சிலுவை மரம் முட்கள் நிறைந்த மரம். சிலுவையில் இருந்த முட்கள் இயேசு பெருமான் என்னும் பறவையைக் குத்தின. இயேசு பெருமான் என்னும்ம் பறவையைக் குத்தக் குத்த, இரத்தம் சொட்டுச் சொட்டாக விழுந்தது. இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. அப்போது இயேசு பெருமான் என்னும் அந்தப் பறவை ஏழுசுரங்களில் இன்னிசை பாடியது. அந்த ஏழு சுரங்கள் என்ன தெரியுமா? தந்தையே இவர்களை மன்னியும் இவைதான் இயேசு பெருமான் என்னும் அதிசயப் பறவை பாடிய இனிமையான இராகம். இது இன்றும் சிலுவையில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த ஏழிசை உலகம் முடியும் வரை, ஒரு கோடி முனை தொடங்கி மறு கோடி முனை வரை முழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதைக் கேட்ட்கும் அனைவரும் இயேசு மயமாக மாற வேண்டும். இன்னிசை பாடும் இயேசுவைத் தேடும்
உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம் ...................................................................................
HTML Comment Box is loading comments...
அனுப்பியவருக்கு நன்றிகள். வாசிக்கிற நீங்களும் எழுதி இந்த இமெயிலுக்கு அனுப்பலாமே!
Send us your articles : tamilrosary@gmail.com
|
