Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

 

Previous two angels

 

ஒரு நாள் இரண்டு சம்மனசுக்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது தங்களுடைய இரவை கழிப்பதற்காக ஒரு பணக்கார வீட்டிற்கு
சென்றார்கள்.

மரியாதையற்ற அப்பணக்கார குடும்பம் சிறிதும் தயக்கமின்றி, அவர்களுக்கு இடம் கொடுக்க மறுத்து, அவர்களை மாளிகையின் விருந்தினர்
அறையில் கூட தங்க இடமளிக்காமல், கட்டிடத்தின் அடித்தளத்தில் குளிர்மையான ஓர் இடத்தில் இடம் கொடுத்தார்கள்.

சம்மனசுகள் தங்களுடைய படுக்கையை கட்டாந்தரையில் அமைக்கும் போது, அங்கிருந்த சுவரில் ஒரு துவாரம் இருப்பதைக் கண்ட பெரிய
சம்மனசு அதை உடனே சரி செய்தது. அதைக் கண்ட மற்ற சின்ன சம்மனசு ஏன் சரி செய்கிறீர்கள்? என்று உடனே கேட்க, அதற்கு அப்பெரிய
சம்மனசு "நாம் பார்ப்பவை அனைத்தும் உண்மையல்ல" என்று கூறியது.

அடுத்த நாள் இரவு அவ்விரண்டு சம்மனசுகளும் இளைப்பாறுவதற்கு ஒரு ஏழை வீட்டிற்கு சென்றது. அங்கு நன்கு விருந்தோம்புங்குணமுடைய
விவசாயியையும் அவரது மனைவியையும் கண்டனர்.

அவர்களுக்கென்று உண்பதற்கு இருந்ததை, அச்சம்மனசுகளுக்கு பகிர்ந்து கொடுத்து, அவர்களை அவர்களது படுக்கையிலே உறங்க சொல்லி
விட்டு, அவர்கள் கீழே உறங்கினார்கள். பொழுது விடிந்து சம்மனசுகள் எழும்பும் போது, விவசாயியின் பிழைப்பிற்கான ஒரே ஒரு பசு
இறந்திருப்பதைக் கண்டு, விவசாயியும் அவரது மனைவியும் கண்களில் கண்ணீருடன் கவலையில் காணப்பட்டார்கள்.

இதைக் கண்ட அச்சின்ன சம்மனசு அதிக கோபப் பட்டு, பெரிய சம்மனசிடம், இச்சம்பவம் நிகழ எப்படி இடம் கொடுத்தீர்கள்? முதல் மனிதனிடம்
எல்லாமே இருந்தது, ஆனாலும் நீங்கள் உதவினீர்கள். இரண்டாம் குடும்பத்தினரிடம் இருந்ததே மிக குறைவு. ஆனாலும் அவர்கள் அனைத்தையும்
எம்முடன் பகிர்ந்து கொள்ள தயாராயிருந்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களுடைய பசு இறப்பதை தடுக்கவில்லை என்று வருத்ததுடன் கூறியது.

அதற்கு அப்பெரிய சம்மனசு "நாம் பார்ப்பவை அனைத்தும் உண்மையல்ல", நாங்கள் மாளிகையின் கட்டிட அடித்தளத்தில் இருந்த போது, நான்
அங்குள்ள சுவரிலே ஒரு தங்க கிடங்கு ஒன்று இருப்பதை அவதானித்தேன்.

அவ்வீட்டு உரிமையாளரோ பேராசை மனம் கொண்டு தன்னிடம் உள்ளவைகளை பிறருடன் பகிர மனமில்லாத ஒருவராக இருந்த படியால், நான்
அவர்கள் சுவரின் துவாரத்தை மூடி மறைத்துவிட்டேன். நேற்றிரவு நாம் விவசாயியின் வீட்டில் உறங்கும் போது, விவசாயியின் மனைவியை தேடி
மரணம் வருவதை நான் அவதானித்தேன், அவரின் மனைவிக்கு பதிலாக, அவ்வீட்டு பசுவிற்கு அம்மரணத்தை அளித்தேன்.
"நாம் பார்ப்பவை அனைத்தும் உண்மையல்ல" என்று கூறியது.

எம்முடைய வாழ்விலும் சில சமயங்களில் இது தான் நிகழ்கின்றது. எமக்கு ஏதும் கெடுதல் ஏற்பட்டதும்,
நாம் கோபப்படுகிறோம், கவலைப்படுகிறோம், தெரியாமல் வார்த்தைகளை விடுகிறோம். எமக்கு நிகழ்பவையே
உண்மை என்று நினைக்கின்றோம். இவற்றுக்கு பதிலாக அமைதியாக இருந்து சிந்தித்தால், எமக்கு ஏற்படும்
கெட்டவை அனைத்தும் ஒரு நல்லதுக்கே என்ற தெளிவு தோன்றும்.
ஆகவே, எம்மைப் போல் நாம் பிறரையும் அன்பு செய்து, மற்றவர்களுக்கு உதவு செய்து வாழ்வோம்.
"நாம் பார்ப்பவை அனைத்தும் உண்மையல்ல" கெட்டதிலும் ஒரு நம்பிக்கை உண்டு என்று உணர்வோம்.

 

Send us your articles : tamilrosary@gmail.com