Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

 

Previous
Cane Wedding

கானா ஊர் திருமணத்தில் மரியாள்

யோவான் 2: 1-12

திருச்சபையின் தொடக்கத்தில் மரியாள் திருச்சபையின் முதல் பெரும் தூனாக இருந்தாள்.

யோவான் நற்செய்தி கானா ஊர் திருமணத்தைப்பற்றிப் பல சம்பவங்களைக் கூறி நிற்கின்றது.

இதில் முக்கிய அம்சமாக பழைய சமய திட்டங்களை விடுத்து புது சமயம், மதம் பிறக்கின்றது.

யூத மதச் சட்டங்கள் ஒரு புறம் இருக்க இயேசுவின வருகையுடன் திருச்சபை உருவாக்கப்பட்டது. அதை யோவான் தெளிவாக கானா ஊர் திருமனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கானா ஊர் திருமனத்திற்கு அழைக்கப்பெற்றவர்கள் யார்?

இயேசு அழைக்கப்பெற்றார். மரியாள் அழைக்கப்பெற்றார். மரியாளோடு சேர்த்து இயேசுவின் சீடர்கள் அழைக்கப்பெற்றார்கள்.

மரியாளின் வேண்டுகோள், மகனே இரசம் தீர்ந்துவிட்டது, அதற்கு இயேசுவின் பதில், நான் என்ன செய்யமுடியும், எனது நேரம் இன்னும் வரவில்லையே என்று கூறினாள். ஆனால் மரியாள் சொன்ன வார்த்தை, அவர் சொல்லுவதை எல்லம் செய்யுங்கள்.

இயேசு செய்த புதுமை தண்ணீரை இரசமாக மாற்றிது மாத்திரம் அல்ல. இது வெளி அடையாளமாக இருந்தாலும் உள்நோக்கம் ஒன்று இருந்தது. மரியாள் இறை திருவுளத்தையும் காலத்தையும் நேரத்தையும் தெளிவாகப் புரிந்து வைத்தவள், பழைய யூத மதம் பயனற்றுப்போகின்றது, எனவே புதிய திருச்சபை உருவாக்கப்படப்போகின்ற நேரம் வந்துவிட்டது என்பதைப் புரிந்த்து கொண்டாள். அதற்குரிய காலமும் நேரமும் வந்து விட்டது என்பதை தெளிவாகப் புரிந்த்து கொண்டாள். அந்த நேரத்தையும் காலத்தையும் மரியாள் இயேசுவிற்கு தெளிவுபாடுத்துகிறாள்.

புதிய இரசத்தை இயேசு தண்ணீரில் இருந்து உருவாக்கினார். தண்ணீர் திருமுழுக்கையும், புதுப்பிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது. திருமுழுக்கின் மூலம் புதுய திருச்சபையை இயேசு உருவாக்கினார். அவரே திருச்சபையின் தலைவராகவும் விளங்கினார்.

எனவேதான் கானா ஊர் திருமணம் தண்ணீரை இரசமாக மாற்றியது மாத்திரம் அல்ல, அதற்கு மேலாக திருச்சபையை உருவாக்கியதை காட்டுகிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது திருச்சபை உருவாக்கப்பட வேண்டிய நேரத்தை இயேசுவுக்கு சுட்டிக்காட்டியவள் மரியாள். அது மாத்திரம் அல்ல, திருச்சபை உருவாக்கப்பட்ட வேளையில் அங்கு பிரசன்னமாக மரியாளும் சீடர்களும் இருந்தார்கள்.

அப்படி மரியாள் திருச்சபையின் தொடக்கத்தில் இருந்தாள் என்றால், அவள் சரியான நேரத்தையும் காலத்தையும் இயேசுவுக்கு கற்றுக்கொடுத்தாள் என்றாள், அவள் திருச்சபையில் முக்கியமான ஒருவளாக இருந்திருக்கினறாள். அவளுடைய பரிந்துரை நிச்சயமாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட தேவ அன்னையை இன்று திருச்சபையில் தேவை இல்லை என்று சொல்ல முடியுமா?

திருச்சபையின் முதற் தூண்கள் மரியாள் சீடர்கள். அப்படிப்பட்டவர்களை நாம் வேண்டாம் என்று இலகுவாகத் தூக்கி எறிய முடியுமா? அப்படிச் சொல்லுவதற்கு நாம் யார்?

ஆதியில் மரியாள் எப்படிப்பட்டவளாக, எந்தளவுக்கு இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரியாதபடியினால்தான் சிலர் இன்று மரியாள் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள்.

ஆனால் யோவான் நற்செய்திப்படி கானாவூர் திருமணம் சொல்லுகின்ற பாடம், அன்மை மரியாள் திருச்சபையின் தொடக்கத்திலேயே இருந்தாள். அவளே திருச்சபையின் தூணாகவும் இருந்தாள். அவளை வேண்டாம் என்று சொல்லுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை.

மரியே வாழ்க

.................................................................

உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்

HTML Comment Box is loading comments...

Send us your articles : tamilrosary@gmail.com