Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

Previous God Answer me where I am today

 

 

இறைவா பதில் கூறு............

எங்கே என் இருப்பு
தேடுகிறேன் யார் இதற்கு பொறுப்பு.....

புள்ளியாக இருந்தவன் நான்
முழு மனிதனாக வந்தது எப்படி?
போட்டியிட்டு
தாய் வயிற்றில் இடம் பிடித்தது எப்படி?
வென்றவன் நான் தேடுகின்றேன்
தோற்றவர்கள் எங்கேயென்று.......

பத்து மாதங்கள் அன்னைக்குள்
பசி தீர்த்து இருந்ததெப்படி
பத்தே நிமிடத்துள் அழுது
வெளியே வந்ததெப்படி
விசித்திர பிறவியோ நான்
விளக்கிட யாரும் உண்டோ?

தொடர்புகள் அறுந்ததும்
தொடரும் சொந்தங்கள் வந்ததெப்படி
மூத்தவர்கள் அவர்களுக்கும்
முன்னிடம் தெரியாதது எப்படி
யாரிடம் நான் கேட்பது
நீயாவது பதில் சொல் இறைவா !!!

பள்ளி வயதில் சுட்டியானேன்
பத்தே வருடத்தில் கெட்டியானேன்
அன்னையின் மொழியும் கசந்திடவே
காதல் மயக்கத்தில் சரிந்திட்டேன்
வாழ்வென்பது நாடகம் தானா?
வாழ்ந்தவர்கள் சொல்கிறார்கள்

செத்தவர்கள் பலரும் போனாரே
அவர் சுற்றத்து உறவும் போவாரே.........
போகுமிடம் சொல்லிடவே யார் வருவார்
அது எப்படியோ? யான் அறியேன்..........
பதில் கூறிடு என் இறைவா!!
அது மட்டும் மாற்றங்கள்
தேவையென எனக்குள் உணர்ந்திட்டு
தேடுகிறேன் பதிலை
தொடர்ந்தும் மெளனம் காக்காதே - இறைவா
புரியவைத்திடும் உம் பதில் கூறி...........

 

 

Send us your articles : tamilrosary@gmail.com