ஒன்றை நெருங்க நெருங்க அதன் பொருள் விளக்கம் பெறுகின்றது. அதன் தன்மை முழுமை பெறுகின்றது. அதன் வடிவம் தெளிவாகின்றது. எட்ட இருந்து பார்க்கும்போது ஒன்றை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அதே ஒன்றை கிட்டச் சென்று பார்க்கும்போது அதனை முழுமையாகப் பார்க்க முடிகின்றது. பல விடயங்கள் நம்மைக் கடந்து செல்லுகின்றன, அல்லது நாம் பல விடயங்களைக் நாம் கடந்து செல்லுகின்றோம். எவ்வளவுதான் கைக்கெட்டும் தூரத்தில் அவை நம்மைக் கடந்து சென்றாலும் அல்லது கைகெட்டும் தூரத்தில் தோன்றினாலும் அதன் பொருள் நாம் பார்க்கும் விதத்தைப் பொறுத்து இறுக்கின்றது உள்ப்பொருள் புரிந்துகொள்ளவேண்டும் என்றால், நாம் உள்பொருள் உணர்வுடன் அதைப் பார்க்கவேண்டும், அதை நெருங்கவேண்டும். ஒன்றை அனுபவிக்கின்ற தன்மை, அது உள்மன ஈடுபாட்டுடன் இசைந்தது. உள்மனம் இசையவில்லை என்றால் அல்லது முழுமன ஈடு பாட்டுடன் செயல்ப்லடவில்லை என்றால், ஒன்றை அது உள்ளபடி புரிந்துகொள்லமுடியாது. நெருங்க நெருங்க மாயை மறைந்து உண்மை தோன்றும் அல்லது தெளிவின்மையில் இருந்து தெளிவும் தோன்றும். தாயை நெருங்க நெருங்க தாய்மைக் கண்டேன். இயற்கையை நெருங்க நெருங்க விந்தையைக் கண்டேன் கடலை நெருங்க நெருங்க ஆழ்த்தைக் கண்டேன் காற்றை நெருங்க நெருங்க உயிரைக் கண்டேன் தெய்வமே உன்னை நெருங்க நெருங்க ஆனந்தப் பரவசத்தை அனுபவித்தேன். எட்ட நின்று பார்த்தபோது கல்லைக் கண்டேன் எட்ட நின்று பார்த்தபோது பாம்பைக்கண்டேன் எட்ட நின்று பார்த்தபோது கானல் நீரைப் பார்த்தேன் இறைவா நீ எங்கே இருக்கின்றாய் உன்னை நான் நெருங்க. நீ நெருங்கித்தான் இருக்கிறாய், ஏனென்றால் நான் எங்கும் எதிலும் இருக்கிறேன். நீ என்னை நெருங்கினால் மட்டும் போதாது, உள்மனம் அதனை நெருங்க வேண்டும், அதில் நாட்டம் காண்வேண்டும். தெய்வத்தை நெருங்க நெருங்க உள்மனம் பரவரம் அடைகின்றது. இறைவா உன்னை நெருங்க நெருங்க மாயை என்னை விட்டகன்றது மாயை எனை விட்டு அகல அகல உன்மை பிறந்தது உண்மை பிறக்கப் பிறக்க உள்ளொளி கண்டேன் உள்ளொளியில் பரவசம் கண்டேன் பரவசத்தில் உன்னைக் கண்டேன் நெருங்க நெருங்க இறைவா உன்னைக் கண்டேன். ............................................................ உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்
HTML Comment Box is loading comments...
Send us your articles : tamilrosary@gmail.com
|
