Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

 

Previous
eagle

 

 


அந்தக் கழுகு 35 ஆண்டுகளைக் கடந்த பிற்பாடு தன்னுடைய பலத்தை இழக்கின்றது. குறிப்பாக அது த்ன்னுடைய சொண்டினுடைய பலத்தையும் கால் நகங்களின் பலத்தையும் இழக்கின்றது. இதனால் தன்னுடைய இரயைப் பிடித்து உண்ணமுடியாத நிலைக்குச் செல்லுகின்றது. அது பட்டினி கிடந்து சாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

எனவேதான் ஒரு கழுகு இந்த நிலைக்கு வருகின்றபோது இரண்டு விதமான முடிவுகளில் ஒன்றைத் தெரியவேண்டி இருக்கிறது.

ஒன்று, ஒரு மலைக்குச் சென்று அதனோடு மோதி தற்கொலை செய்துகொள்வது.

இரண்டாவது, அதன் சொண்டை மலையோடு மோதி அதனை விழச்செய்து, புதிய சொண்டு வளரும் வரை காத்திருப்பது. அதனுடைய வேதனையைத் தாங்கிக்கொள்வது.

சொண்டு வளர்ந்த்த பிற்பாடு தன் புதிய சொண்டினால் தன் கால் நகங்களை கொத்தி விழச்செய்து புதிய நகங்கள் வளரும்வரைக் காத்திருப்பது.

இவற்றை செய்வதற்கு அது தன்னையே வருத்தி, துன்பத்தை தாங்கி பழைய நகத்தையும் சொண்டையும் இல்லாமல் செய்து, புதிய சொண்டையும் நகத்தையும் பெற்றுக்கொள்ளுகிறது.

அப்படிப் பெற்ருக்கொள்ளிகிறபோது இன்னும் 35 ஆண்டுகள் தன் வாழ்வை புதியதாகக் கொண்டுசெல்ல முடிகிறது.

தேவையற்றதை விடவேண்டி வரும்போது துன்பம் வந்தாலும் அதைத்தாங்கிக் கொண்டால், புதிய வாழ்வு ஆரம்பமாகும்.

Send us your articles : tamilrosary@gmail.com