Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

 

Previous
Virgin Mary

இறைவார்த்தையில் முன்னுரிமை பெற்றவள் மாரியாளா அல்லது நாங்களா?

மாரியாள் வேண்டாம் என்று சொல்லி இன்று இறைவார்த்தையை பைகளிலும் கைகளிலும் துக்கிச்செல்வோர் நிறையவே இருக்கின்றார்கள். இதன் அடிப்படையில் இறைவர்த்தையை சுமப்பவர்களில் முன்னுரிமை பெறுபவர் மாரியாளா அல்லது நாமா?

இறைவார்த்தையை சுமந்தவாகளில் மாரியாள் முன்னுரிமை பெறுகின்றாள். இதை ஏற்றுக்கொள்ளுகின்றவர்களுக்கும், அதிலே தளராத விசுவாம் வைத்திருப்பவர்களுக்கும் இனிவருகின்ற காலங்களில் மாரியாளில் நம்பிக்கையில்லா தன்மை வரக் கூடாது என்பதற்காகவும், அன்னை மாரியளை எற்றுக்கொள்ள நாட்டம் இல்லாதவர்களுக்கும், அன்னை மாரியாள் தேவை இல்லை என்று சொல்லுகின்றவர்களுக்கும் இது எழுதப்படுகின்றது.

படைப்பின் தொடக்கத்திலேயே இயேசு இருந்தார் என்பதும் அவர் மூவொரு கடவுளாக இருந்தார் என்பதும், தெளிவான உண்மை. இயேசு தொடக்கத்தில எப்படி இருந்தார் என்றால், அவர் வாக்காக, வார்த்தையாக இருந்தார்.

' தொடக்க்த்திலே வாக்கு இருந்தது,
அவ்வாக்கு கடவுளோடு இருந்தது,
அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.
வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில்
கடவுளோடு இருந்தார்.
அனைத்தும் அவரால் உண்டாயின்
உண்டானது அனைத்தும் அவரால் அன்றி
உண்டாகவில்லை."
யோவான் 1: 1-3

ஆகவே இந்த இயேசு என்னும் வார்த்தை தொடக்கத்திலேயே மூவொரு கடவுளுடன் ஒன்றாக இருந்தது.

இயேசு இந்த உலகிற்கு வந்தபோது நமக்கு கூறப்பட்டது,

' வார்த்தை மனுவுருவானார் அவர் நம்மிடையே
குடிகொண்டார்"
யோவான் 1: 14

எனவே இயேசுதான் வார்த்தையாக இருந்தார், அவர்தான் மனுவுரு எடுத்து இவ்வுலகிற்கு வந்தார்.

இயேசு இவவுலகிற்கு வருவதற்கு இறைவன் ஒருவரை விசேட விதமாக ஆயத்தப்படுத்தினார். அவர்தான் மாரியாள்.

எனவேதான் இறைவாக்கு என்னும் இயேசுவை முதலில் சுமந்தவள் மாரியாள், அதுவும் தன் வயிற்றில் இயேசுவைச் சுமந்தவள் மாரியாள்.

' இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர் அவருக்கு
இயேசு என்று பெயாரிடுவீர்."
லுhக் 1: 31

எனவேதான் மாரியாள் 10 மாதங்களாக இயேசு என்னும் இறைவார்த்தையை தன் வயிற்றில் சுமந்தவள். ஆகவேதான் இறைவார்த்தையை முதலில் சுமந்தவள் மாரியாள், அதன் பிற்பாடுதான் நாம் எல்லோரும். அவள்தான் இறைவார்த்தைக்கு உரிமை உடையவள். எப்படிப்பட்ட உரிமை என்றால் தன் சொந்த வயிற்றில் இயேசு என்னும் இறைவார்த்தையை சுமந்த உலகிற்கு இயேசுவை அறிமுகப்படுத்தியவள். ஆகவே மாரியாளை யாரும் புறக்கணிக்க முடியாது.

அப்படி என்றால் இன்று பலர் இறைவார்த்தையை சுமந்து இயேசுவைப்பற்றிப் போதிக்கின்றார்கள் . அதேவேளை அவர்கள் தான் இறைவார்த்தைக்கு உரிமை உள்ளவர்கள் என்று கூறுகின்றார்கள். மாரியாள் தேவை இல்லை என்று கூறுகின்றார்கள். இவர்களைப் பற்றி என்ன கூறுவது?

ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்வேண்டும். அதாவது, நேற்று வந்த எங்களை விட, இயேசு தம்முடைய தாயாரன மாரியாளுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார். இயேசு ஒருபோதும் மாரியாளை தூக்கி எறிந்துவிட்டு நம்மை அன்பு செய்யப்போவதில்லை. அப்படி அவர் செய்வாராகில் அவரால் ஒரு நீதியுள்ள கடவுள் கிடையாது
......................................

உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்

HTML Comment Box is loading comments...