அதிகாரம் ஏழு – நற்கருணை இரத்தமாக மாறுதல்
மே 16, 1991 நாஜூ நகரின் பங்கு ஆலயத்தில் காலை 6 மணிக்கு திருப்பலி. அத்திருப்பலியை பிலிப்பைன்ஸ் நாட்டுக் குருக்கள் இருவர் நிறைவேற்றினர். நாஜூ பங்கைச் சார்ந்த சிலரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த 33 யாத்திரிகர்களும் அதில் பங்கேற்றனர். நான் நற்கருணை பெற்றவுடன் எனது வாயிலிருந்து இரத்த வாடை தோன்றியது. ஆலயத்தி எனது இருக்கைக்கு வந்து அதை ருபினோவிடம் காட்டினேன். அவர் எனது நாவில் இருந்த அப்பம் முதலில் இளம் பழுப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களில் மாறி விரைவில் சிகப்பு நிறத்திற்கு மாறியதைக் கண்டார்.
அதை அங்கிருந்த குருக்களுக்கும் ஏனைய கிறிஸ்தவர்களுக்கும் காட்டினேன். அவர்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தினார்கள். திருப்பலி நிறைவேற்றிய இரு குருக்களும் நற்கருணைப் பெட்டகத்திற்கு முன்னால் இருந்து கொண்டு செபம் செய்துவிட்டு அழுதனர். அந்த அப்பத்திலிருந்து இரத்தம் கசிந்து என் வாய் முழுவதும் நிரம்பிவிட்டது.
அப்பொழுது ஒரு காட்சியைக் கண்டேன். நாஜீவில் அழுது கொண்டிருந்த தேவ அன்னை நீல நிற மேல் அங்கி அணிந்துகொண்டு, வலது கரத்தில் செபமாலையுடன் புன்னகை செய்த வண்ணம் அழகாகக் காட்சி தந்தார். கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவ்விரு குருக்களையும் அரவணைத்தார். சிலநொடிகளில் இரக்கமும் சோகமும் நிறந்த இயேசுவின் குரல் கேட்டது. இயேசு: மகளே! என்னை அவமானப்படுத்தும் பாவிகளுக்காக மேலும் பாவப் பரிகாரங்களை ஒப்புக்கொடு. உலகம் என்னைத் தாக்கியும், வெறுத்தும், அவமதித்தும், சவுக்கால் அடித்தும், ஒதுக்கித் தள்ளியும் வருகிறது. இவ்வாறு கடவுளின் கோபத்தைத் தூண்டிவிடும் அனேக ஆன்மாக்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களை மன்னிக்குமாறு எனது மாசற்ற இதயம் ஆசிக்கிறது. இருளில் மூழ்கியுள்ள இந்த உலகை நிரந்தர அழிவிலிருந்து காப்பாற்றவும், பாவிகளுக்கு முடிவில்லா இன்பம் தரவும் எனது ஐந்து காயங்களும் உதவட்டும். நான் உங்கள்மீது அளவற்ற அன்புகொண்டுள்ளதால் தெய்வீகத்தோற்றத்தையும் மனிதத் தன்மையையும் மறைத்து, அப்பத்தின் வழியாக எனது அன்பை வெளிப்படுத்துகிறேன். அந்த அப்பத்தின் வழியாக நானே உங்களிடம் நேரில் வருகிறேன். ஆனால் பல ஆன்மாக்கள் நான் நற்கருணை அப்பத்தில் உண்மையாகவே வாழ்கிறேன் என்று நம்பாமல், பாவக்கறையுடன் நற்கருணைபெற்று, இறை துரோகம் செய்வது மட்டுமண்றி, நன்றிகெட்ட முறையில் என்னை அசட்டை செய்து, இழிவுபடுத்துகின்றனர். மகளே! இந்த இறை இரகசியத்தைப் புரிந்துகொள்ளாத குழந்தைகளுக்கு நற்கருணயைப் பற்றி தெளிவாகச் சொல். அப்படியாவது எனது அன்பும் கடுமையான உனது தியாகமும் எண்ணெற்ற ஆன்மாக்களைக் காப்பாற்றட்டும். இறை இரகசியமான நற்கருணையில் வாழும் நான் என்றும் வற்றாத ஊற்று. நோயுற்ற ஆன்மாக்களை குணப்படுத்தும் மருந்து. நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர். நான் தான் அன்பு அன்புதான் நான். எனவே பாவங்கள் செய்து கெட்டு நாசமாகவுள்ள ஆன்மாக்கள் மீது நான் அன்பு கொண்டுள்ளேன். அவர்கள் பாவசங்கீதனம் என்னும் திருவருட்சாதனம் ஊடாக என்னிடம் வரும்போது நான் அவர்களின் பாவங்களைப் போக்கி என் அன்பில் வாழ வைப்பேன். இவ்வுலக மக்கள் பெருவாரியானவர்கள் உலகத்தை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு முன்பாகத் தலைவணங்கி, அவர்களை அளவுக்குமீறிப் புகழ்கிறார்கள். ஆனால் ஒருசிலர்தான் விண்ணுலகின் பிரபுவும், இந்த அகிலத்திற்கெல்லாம் பேரரசருமான இறைவன் முன்பாக முழந்தாலிட்டு ஆராதித்து, அவரிடமிருந்து அருள்பெற மன்றாடுகின்றனர். இதனால் என் இதயம் மிகுந்த வேதனை அடைகின்றது. இப்பூவுலகில் பாவங்கள் நிறைந்துவிட்டன. கடைசி நேரமும் நெருங்கிவிட்டது. உலகில் வாழும் குழந்தைகளே! உங்களை நெருங்கி வந்துகொண்டிருக்கும் தண்டனையை எண்ணி நீங்கள் பயப்பட் வேண்டியுள்ளது. பயப்படாமல் இருக்கவேண்டும் என்றால் தொடர்ந்து செபம் செய்யுங்கள். பரிகாரம் பண்ணுங்கள், புனிதத் தன்மையுடன் வாழுங்கள். அவ்வாறு வழ்ந்தால் பேயின் தந்திரமான சோதனை வலையில் விழாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். பேய்கள் நீங்கள் பாவங்கள் பண்ணவும், ஆத்திரம் கொள்ளவும், பலாத்காரம் செய்யவும், சுயநலமாக வாழவும் உங்களைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றது. இந்த இக்கட்டான நேரத்தில் எனது அன்னை பல இடங்களில் தோன்றி கண்ணீர் சிந்தி மன்றாடிக் கொண்டு சொல்லும் செய்திகளின் படி வாழ்க்கை நடாத்துங்கள். எனது அன்னை வெற்றி பெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக உங்கள் பாவங்களுக்காகப் பாவப்பரிகாரம் செலுத்திவிட்டு மரியன்னையின் மீட்புக் கப்பலில் ஏறி அமர்ந்துகொள்ளுங்கள்.
Send us your articles : tamilrosary@gmail.com |
