Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

 

 

 

     

 

 

Previous
St.Maria Goreti

 

புனித மரிய கொறற்ரி. அழியா உடல்

புனித மரிய கொறற்ரி 1890, ஒக்டோபர் 16இல் பிறந்தார். வேலை காரணமாக இவரது குடும்பம் 18999 இத்தாலி நாட்டிற்கு சென்றது. அங்கே அவர்கள் வாழ்ந்தார்கள்.

மரிய கொற்றரி விரைவிலேயே முதிர்ச்சி அடைந்தார். எதைப் பற்றியும் குறையிடுவதிலை. புதுநன்மை பெறுவதில் மிகவும் ஆர்வமாய் இருந்தார். இயேசுவை நற்கருணையில் பெறுவது எவ்வளவு மகிழ்ச்சியானது என்று பலமுறை கற்பனை செய்துள்ளார்.

இருந்தாலும் அலசாண்ட்ரோ 19 வயது இளைஞன், இறை பக்தியோ, பயமோ இல்லாத ஒருவன். அவன் மரிய கொறரி மீது ஆசை கொண்டு அவளை கெடுக்க முற்பட்டான். மரிய கொறரியும் பல புத்தி சொல்லியும் அது அவன் காதில் எடுபடவில்லை.

யூலை 5, 1902 அலசாண்ட்ர் பாவ முடிவு எடுத்தான். அன்று காலை மரியா கடும் நோய்வாய்பட்டிருந்தார். இருப்பினும் வயலுக்கு வேலை செய் செல்ல முற்பட்ட வேளை அவருடைய தாயார் அவரை வீட்டில் நிற்கும்படி கூறினார். தனிமையாக இருக்க் விரும்பவில்லை. இருந்தாலும் தாயின் சொற்படி வீட்டில் இருந்தார்.

வீட்டில் உள்ள எல்லோரும் சென்ற உடன் அலக்சாண்டர் கெட்ட எண்ணத்துடன் மரியாவின் அறையினுள் அவளை கெடுக்கும் நோக்குடன் நுழைந்தான். மரியா மறுத்தபடியுனால் தனது கூரிய வாளினால் 14 முறை மரியாவின் வயிற்றில் குத்தினான். மரியா இரத்த வெள்ளத்தில் அம்மா என்று கத்தி நிலத்தில் விழுந்தார்.

அங்கு வந்த தகப்பனார் உடனே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார். ஒரு மணி நேரம்தான் அவர் உயிர்வாழ்ந்தார். இதற்கிடையில் குருவானவர் ஒருவர் பாவசங்கீதனம் கேட்டார். உன்னை கொலை செய்தவனை நீ மன்னிக்கிறியா என்று கேட்டதற்கு, என் முழுமனதோடு நான் மன்னித்துவிட்டேன், அவனும் மோட்சத்திற்கு வரவேண்டும் என்று வேண்டுகிறேன் என்று கூறி தேவ அன்னையின் படத்தைப் பார்த்தபடி உயிர்விடார்.

இறந்து 50 வருடத்திற்குள் மரிய கொறற்ரி புனிதராக பிரகடனப்படுத்தப்பட்டார். அவரது புனிதப் பட்ட நிகழ்வுக்கு மரிய கொறற்ரியின் தாயாரும், அலக்சாண்டரும் தன்னுடைய 30 வருட சிறை வாழ்க்கையை முடித்து, இருவரும் இதில் கலந்துகொண்டனர்.

இவரது அழகிய அழியா உடல் இத்தாலி நாட்டில் உள்ள இரக்கத்தின் தேவமாதா ஆலயத்தில் அமைந்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

Send us your articles : tamilrosary@gmail.com