Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

 

 

 

     

 

 

St.John Vianny

 

புனித ஜீன் மரிய வியானி - அழியா உடல்

புனித கீன் மரிய வியானி 1786, மே 8 இல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். கடவுள் பற்றுள்ள தாயினால் இறைவனுக்குப் பயந்த, அன்புள்ள குழந்தையாக இவர் வழக்கப்பட்டார். தேவதாயார் மட்டில் மிகுந்த அன்பு கொண்ட இவர் குருவாக வர விரும்பினார். அவருடைய தாயாரும் உருக்கமாக அவருக்காக மன்றாடினார். அவர் வளர வளர சாத்தானின் கெடுபிடியும் அவருடைய வாழ்வில் கூடியது. குறிப்பாக அவரை குருவாக வரவிடாமல் பல தடைகள் செய்தது. இருந்தாலும் கடைசியில் இறைவந்தான் வெல்லுவார் என்பதற்கமைய புனித ஜீன் வியானி ஒரு குருவாக மாறினார்.

குருவாக வந்த பின்னரும் சாத்தான் அவரை விட்டு வைக்கவில்லை. அதிகாரிகள்மூலமாக அவர் பாவசங்கீர்தனம் கேட்டு மக்களுக்கு அறிவுரை சொல்ல இவருக்கு தகுதி இல்லை என்று கூறி பாவசங்கீதனம் கேட்க தடைசெய்யப்பட்டது. இவருடைய கடுமையான செபத்தினாலும், உபவாச, ஒறுத்தலினாலும் இவருக்கு மீண்டும் பாவசங்கீதனம் கேட்க அனுமதி வழங்கப்பட்டது. இவர் அன்பினாலும், கடுனையான வழிகாட்டலினாலும் பல ஆன்மாக்களை மீட்டார்.

சில காலத்தின் பின் புனித ஜீன் வியானி பிரான்ஸ் நாட்டிலுள்ள ஆர்ஸ் என்ற நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பலபேர் இந்த நகரைப் பற்றி கேள்விப்பட்டது இல்லை. அந்த நகரில் பல ஆன்மாக்களை அவர் கிறிஸ்துவிற்காக வென்றார். கடினமான இதயங்களை அவர் மாற்றினார். ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்து பல மக்கள் பாவசங்கீதனம் கேட்பதற்காக மட்டும் இவரிடம் வந்தார்கள். நாளுக்கு 16 மணித்தியாலங்கள் அவர் பாவசங்கீத்தன தொட்டியில் செலவழித்தார். பல ஆண்டுகளாக இயேசுவிற்காக இவர் பல துன்பங்களைப் பட்டு பல ஆன்மாக்களை மீட்டார்.

1859 ஆகஸ்ட் 4இல் இவர் மரணமானார். இவருடைய மரணத்தினால் முழு ஐரோப்பா நாடுகளே கவலையில் ஆழ்ந்தது. மிகவும் புனிதமான பாவசங்கீதனம் கேட்கும் குருவை இழந்துவிட்டோம் என்ற கவலை எல்லோரையும் வாட்டியது.

இவருடைய உடலானது 1904 ஆண்டு கல்லறையில் இருந்து எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்தும் இவருடைய உடல் அழியாமல் இருந்தது. இன்று இவருடைய உடல் ப்ரான்சில் ஆர்ஸில் உள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவற்றை பார்த்து தரிசிக்கக் கூடியதாக உள்ளது.

 

 

   

 

 

Send us your articles : tamilrosary@gmail.com