கத்தரினா லாபோர் – அழியா உடல் புனித கத்தரினா லாபோர், 1806 ஆம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி, மாலை திரிகாலைச் செபம் சொல்லுவதற்காக ஆலய மணியோசை ஒலிக்கும் வேளையில் பிறந்தார். 11 பேர் உள்ள குடும்பத்தில் 9ஆவது குழந்தையாக இவர் பிறந்தார். அடுத்த நாளே இவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அன்றைய நாள் “உண்மையான திருச்சிலுவை கண்டுபிடிக்கப்பட்ட” திருநாள். தேவமாதாவின் அருளைப் பெற்ற ஒரு புனிதையாக இவர் இருந்தார். அதனால்தான் தேவதாயாரின் ஆலய மணி ஓசை வேளையில் இவர் பிறந்தார். கத்தரினாவுக்கு 9 வயது நடக்கிறபோது, அவருடைய தாயார் மரணமடைந்தார். தமது தாயரின் அடக்கச்சடங்கு முடிந்தவுடன், அறைக்குச் சென்று அங்கு இருந்த கன்னி மரியாளின் திருச்சுருபத்தை எடுத்து முத்தமிட்டு, இவ்வாறு கூறினாள். “இன்று முதல் நீர்தான் எனக்கு அம்மா” என்று கத்தரினா இளமையாய் இருக்கும்போது ஒருநாள் புனித வின்செண்டி போலை காட்சியில் கண்டார். அன்று முதல் கன்னியராக ஆசைப்பட்டு கன்னியர் மடத்தில் சேர்ந்தார். ஏழைகள் மட்டிலும், இன்னும் நோயாளிகள் மட்டில் முகவும் அன்பானவர். புனித வின்செண்டிப் போலையும் , தேவ மாதாவையும் பலமுறை காட்சியில் காண்பதற்கு பேறுபெற்றவர்.
Send us your articles : tamilrosary@gmail.com |
