புனித பெர்னதெத் – அழியா உடல் புனித பெர்னதெத் 1844 ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில், லூட்ஸ் என்னும் இடத்தில் ஒரு ஏழைப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவர் சிறு வயதிலெயே அஸ்மா நோயினால் மிகவும் வேதனைப்பட்டார். இதனால் கல்வியில் பின் தங்கி இருந்தார். 1858 ஆம் ஆண்டில், பெப்ருவரி,11,இல் அவருடைய இளைய சகோதரியுடனும், நண்பியுடனும் விறகு பொறுக்க மலையடிவாரத்துக்ச் சென்றனர். அங்கே ஒரு அழகான பெண் ஒருத்தி ரோஜா மரச் செடியின்மேல் நிற்பதைக் கண்டனர். அந்தப் பெண் நீலத்திலும், வெள்ளையிலுமான உடை அணிந்திருந்தாள். பெர்னதெத்தைப் பார்த்து புன்முறுவல் பூர்த்து, சிலுவை அடையாளம் வரைந்தாள். பெர்னதெத்தும் முழந்தாள்படி இட்டு செபிக்கத் தொடங்கினாள். அவளுடைய கையில் திருச்செபமாலை இருந்தது. அந்த அழகிய பெண் வேறு யாருமல்ல, இறைவனின் தாய், கன்னி மரியாள். இவ்வாறு தேவதாயார், புனித பெர்னதெத்துக்கு 18 முறை காட்சி கொடுத்தார். தேவ அன்னை பெர்னதெதைப் பார்த்து கெபிக்கு அருகில் சென்று அந்த அழுக்கு நிறைந்த இடத்தில் கையினால் கிண்டச் சொன்னார். அவரும் அப்படியே செய்தார். முதலில் எதுவும் நடக்கவில்லை. இரண்டாம் முறை நீர் ஊற்று ஒன்று தோன்றி அதில் இருந்து நீர் பாய்ந்தது. அது லூர்து நீர் ஊற்று என்று அழைக்கப்படுகிறது. 22 வயதில் புனித பெர்னதெத், கன்னியர்கள் மடத்தில் சேர்ந்து கன்னியாஸ்திரி ஆனார். 13 வருடங்கள் கன்னியர் மடத்தில் வாழ்ந்தார். இதில் பெரும் பகுதி நோய்வாய்ப்பட்டிருந்தார். ஒருமுறை ஒரு அருட்சகோதரி இவரைப் பார்த்து, பெலனில்லாத நோயாளி என்று திட்டினார். அதற்கு அவர் கூறிய பதில் “எனது தொழில் நான் நோய்வாய்ப்பட்டிருப்பதே” புனித பெர்னதெத் 1879 எப்ரல் 16 இல் மரணமடைந்தார். தேவமாதாவின் மாசில்லாத் உற்பவம் அன்று 1933, 8 டிசம்பர், புனிதையாக பிரகடனப்படுத்தப்பட்டார். தேவ அன்னை கூறியது இதுவே..” இந்த உலகில் நான் சந்தோசத்தை உமக்குத் தரமாட்டேன். ஆனால் அடுத்த உலகத்தில் அதை உமக்குக் கொடுப்பேன்.” அழியாத புனித பெர்னதெத்வின் உடலானது ப்ரான்ஸ் நாட்டில் நேர்வெஸ் என்னும் இடத்தில் உள்ள புனித கில்டாட் மடத்தில் இருக்கிறது.
Send us your articles : tamilrosary@gmail.com |
