பற்றிமா நகரில் தேவமாதாவின் காட்சி
பற்றிமா நகரில் அன்னை மரியாள் 3 சிறுவர்களுக்கு கொடுத்த காட்சியின் வரலாறு. 21 ஆம் நூற்றாண்டில் அன்னை மரியாள் இந்த உலகத்திற்கு கொடுத்த முக்கியமான காட்சியாகும். மனுக்குலத்திற்கு வர இருக்கின்ற அழிவைப் பற்றியும் அதில் இருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றியும் தம் குழந்தைகளாகிய எங்களுக்கு இக் காட்சியிலே கூறியுள்ளார்.
அன்னை லூசியாவிற்கு கொடுத்த இரகசியங்களிலே 3 ஆவது இரகசியம் முக்கியமான இரகசியம் ஆகும்.
தேவதாயார் மனுக்குலத்திற்காக பரிந்து பேசுகின்ற அன்னையாக இருக்கிறாள். இந்த யுத்தம் இயேசுவிற்கும் அலகைக்கும் இடையிலான கடைசி யுத்தம். இந்த யுத்தத்தில் தம் மகன் இயேசு வெல்ல வேண்டும் என்றால், தம் மகனுக்காக என்னவும் செய்வாள். எனவேதான் கன்ணீரோடும், துக்கத்தோடும், தம் மகனுக்காகவும் , நமக்காகவும், நடக்கின்ற இருளுக்கும் , ஒளிக்கும் இடையிலான யுத்தத்தில் நாம் தோற்றுப் போகக் கூடாது என்பதற்காக தாய்குரிய இரக்கத்துடன் நம்மைத் தேடி வருகிறாள்.
பல காட்சிகளில், பற்றிமா செய்தியானது, மனம் மாறாவிடால் மனுக்குலம் பல துன்பத்திற்குள்ளும் வேதனைக்குள்ளும் தள்ளப்பட்டு அழிக்கப்படும் என்ற செய்தியச் சொல்லி இருக்கிறாள்.
செபம், தபம், பரித்தியாகம். என்பது அன்னையின் வேண்டுகோளாகும்
பாகம் 1 -09.05.2010
பற்றிமாவில் இடம்பெற்ற காட்சி 1915 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. அவ்வேளையில் லூசியாவிற்கு வயது 08. முதலாவது காட்சி எந்த மாதத்தில் நடந்தது என்று சரியாக லூசியாவால் சொல்ல முடியாவிட்டாலும், ஏப்ரல் மாதத்திற்கும் ஒக்டோபர் மாதத்திற்கும் இடையிலே இந்த ஆண்டு இடம் பெற்றது. யசிந்தா , பிரான்சிஸ், ஆகிய இருவரும் லூசியாவினுடைய நண்பர்கள். இவர்களுக்கு இப்படியான விடயங்களைப் புரிந்து கொள்வதற்கு போதிய வயது இருக்கவில்லை.
ஒருநாள் இம்மூன்று சிறுவர்களும் ஆடுகளை மேய்த்து மிடித்த பிற்பாடு பகல் உணவிற்கு ஆயத்தப் படுத்தினார்கள். மதிய உணவு உண்ட பிற்பாடு வழமைபோல திருச்செபமாலை சொல்லத்தொடங்கினார்கள்.
திடீரென அந்தப் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு மரத்தின் மேல் ஒரு உருவம் தோன்றியதை அவர்கள் பார்த்தார்கள். அந்த உருவத்தைப் பற்றி லுசியா கூறும்போது இவ்வாறு கூறினாள். " பனியை விட வெண்மையாகவும், ஊடுருவக்கூடிய தன்மையும், மனித வடிவும் கொண்டதாக அவ்வுருவம் இருந்தது."
அந்த உருவம் அவர்களை நோக்கி வர முயற்சிக்காமல் அங்கேயே இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய நாட்களில் இரண்டு தடவைகள் அந்த உருவம் அவர்களுக்குத் தோன்றியது.
இதைப் பற்றிய செய்தி எங்கும் ஆரம்பத்தில் பரவாவிட்டாலும் லூசியாவின் சகோதரிகள் அவளை ஏளனம் செய்தார்கள்.
அதன்பிற்பாடு 1916 ஆம் ஆண்டில்......
தொடரும் ........