Page 6
இறை இரக்கத்தின் மன்றாட்டு மாலை
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அதி பரிசுத்த திரித்துவமாயிரக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
சகலமும் படைக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
பரலோக ஆரூபிகளைப் படைக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
கடவுளின் சர்வ வல்லமையை மானிடருக்கு வெளிப்படுத்த காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மகா பரிசுத்த திரித்துவத்தின் பரம இரகதியத்தை எங்களுக்கு வெளிப்படுத்த காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உலகத்தை மீட்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
எங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
எங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நாங்கள் அடையவிருக்கும் தண்டணைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமாயிருக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
பாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டுக் கைதூக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மனித அவதாரத்தையும்ää பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக்கொள்ள காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
சகலருக்கும் எப்பொழுதும் எல்லாவிடங்களிலும் உதவியளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருளக்காரணமான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்சச் செய்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
சத்திய திருச்சபையை ஸ்தாபித்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
அருட்சாதனங்களை எற்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
ஞானல்நானத்திலும் பச்சாத்தாபத்திலும் இரக்கத்தை அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் இறை இரக்கத்தை தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
பாவிகளை மனம் திருப்புவதில் இறைஇரக்கத்தை காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
அவிசுவாசிகள் ஒளிபெறுவதில் இறை இரக்கத்தைக் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நீதிமான்களின் அர்ச்சிப்பில் இறை இரக்கத்தை வெளிப்படுத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரத்தத்தின் வழியாக இறை இரக்கத்தை வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உமது மகா பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரத்தத்தினால் எங்களை புனிதப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
இரக்கத்தின் தாயாகிய புனித மரியாளை எங்களுக்குத் தாயாக தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நோயாளிகளுக்கும் துன்பப்படுவோர்களுக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
கதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மரிப்போரின் அடையாளமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
சகல புனிதர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
மீட்கப்பட்டவர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
அற்புதங்களின் வற்றாத துணையாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவேää
எங்கள் பேரில் தயவாயிரும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவேää
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவேää
எங்கள் மேல் இரக்கமாயிரும்
முதல்வர்: ஆண்டவருடைய இரக்கங்கள் அவருடைய சகல படைப்புகள் பேரிலும் உள்ளன.
துணை: ஆதலார் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவேன்.
ஜெபிப்போமாக: மகா தயை நிறைந்த இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே! உமது அளவற்ற இரக்கத்தை குறித்து எங்கள் பேரின் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் சோதனைகளிலும் உமக்கு பிரமாணிக்கமாய் இருக் உமது இரக்கத்தின் அருட்கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும்ää எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்
Send us your articles : tamilrosary@gmail.com |