Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

 

 

 

     

 

ஏழாம் பிரிவு   இரண்டாம் பிரிவு

சின்னக் குறிப்பிடம்

முதல் பிரிவு :ஏக சருவேசுரன் பேரில்

 

1. அனைத்திற்கும் ஆண்டவர் யார்?
சர்வேசுரன்

2. எத்தனை சர்வேசுரன்?
ஒரே சர்வேசுரன். (எல்லாவற்றையும் படைத்து காப்பாற்றும் எல்லா நற்குணங்களும் நிறைந்த சுத்த அரூபியே சர்வேசுரனாகும்)

3. அவர் தேவ சுபாவத்தில் ஒருவராய் இருந்தாலும் ஆள் வகையில் எப்படி இருக்கிறார்?
திhத்துவமாயிருக்கிறார்

4. திரித்துவமாயிருக்கிறார் என்பதற்கு அர்த்தமென்ன?
ஆள் வகையிலே மூவராயிருக்கிறாரென்று அர்த்தமாகும்.

5. இந்த மூன்றாட்களுக்கும் பெயரென்ன?
பிதாää சுதன்ää பரிசுத்த ஆவி

6. பிதா சர்வேசுரனா ?
சர்வேசுரன்

7. சுதன் சர்வேசுரனா ?
சர்வேசுரன்

8. பரிசுத்த ஆவி சர்வேசுரனா ?
சர்வேசுரன்

9. மூவரும் மூன்று சர்வேசுரனா?
இல்லை - ஒரே சர்வேசுரன்

10. எப்படி ஒரே சர்வேசுரன்?
இந்த மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம் ஒரே சித்தம்ää ஒரே வல்லமைää ஒரே தேவ சுபாவம் இருப்பதால் மூவரும் ஒரே சர்வேசுரன் தான்.

11. இவர்களுக்குள்ளே வல்லபம்ää மகிமைää முதலான குணங்களில் வித்தியாசமுண்டோ?
இல்லை - மூவரும் எல்லாவற்றிலும் சரி சமானமாயிருக்கிறார்கள்.

12 இப்படி ஏகமும் திரித்துவமுமாகிய சர்வேசுரனுக்கு பிரதான குணங்கள் எத்தனை?
ஆறு

13 ஆறுஞ் சொல்லு.
1. சர்வேசுரன் தாமாயிருக்கிறார்
2. துவக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்
3. சரீரமில்லாமல் இருக்கிறார்
4. அளவில்லாத சகல நன்மையும் சுரூபியாயிருக்கிறார்
5. எங்கும் வியாபித்திருக்கிறார்
6. எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்

 

 

 

 

 

 

Send us your articles : tamilrosary@gmail.com