வத்திக்கான் நகர்
வத்திக்கான் நகர் (தமிழக வழக்கு:வாட்டிகன் நகர்) (Vatican City) இத்தாலி நாட்டின் உரோமை நகரிலுள்ள
ஒரு சுதந்திர (தன்னாட்சி/இறையாண்மை) நாடாகும். மொத்தப் பரப்பளவு 44 எக்டயார், (108.7 ஏக்கர்)
மட்டுமேயான ஒரு சிறிய நாடாகும்.
உலகின் மிகச் சிறிய நாடும் இதுவே. இதன் தலைவர் திருத்தந்தையாவார்.
இவர் போப்பாண்டவர், பாப்பரசர் என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
வத்திக்கான் நகரத்தில் பாப்பரசரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம்
திருத்தூது (அப்போஸ்தலிக்க) அரண்மனை என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின்
சமய மற்றும் முகாமைத்துவ மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது.
வத்திக்கான் நகரம் 1929ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு. 1929இல் தன்னாட்சி
நாடாக உருவெடுத்த வத்திக்கான் நகரத்தைக் கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற
திருப்பீடத்திலிருந்து வேறுபடுத்திக் காண வேண்டும். வத்திக்கான் நகரின் அரசாணைகள் இத்தாலிய
மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் பெரும்பாலும் இலத்தீன் மொழியிலும் பிறப்பிக்கப்
படுகின்றன. இரு ஆட்சியமைப்புக்களுக்கும் தனித்தனி கடவுச்சீட்டுக்கள் உள்ளன.நாடல்லாத திருப்பீடம்
வெறும் அரசுதொடர்புடைய மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை பிறப்பிக்கின்றது; வத்திக்கான் நகரம்
சாதாரண கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றது. ஆனால் இரண்டு அரசுகளுமே குறைந்த அளவிலேயே
கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றன.
1929ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய
உருவாக்கமாகவே அமைந்தது. முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த பாப்பரசு மாநிலங்களின்
(756-1870) சுவடாக யாரும் கருதவில்லை. 1860-ஆம் ஆண்டு அப்பாப்பரசு நிலப்பகுதிகள் முழுதுமே
இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது. முடிவாக,ரோம் நகரமும் அதன் சுற்று பகுதியும் 1870இல்
சேர்க்கப்பட்டது.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





