முதலில் மனிதத் தன்மை … அதன் பின் புனிதத் தன்மை
வேதங்கள் எல்லாம் இதைத்தான் கற்பிக்கிறது. நான் மனிதனாக வாழ்ந்து, அதன் பின் புனிதனாக இருப்பது. இதை மற்றவர்கள் வேறு விதமாகக் கூறும்போது, மனிதப்பண்புகளோடு வாழ்ந்து, அதன்பின் ஆன்ம விடுதலையையும் முக்தி நிலையையும் அடைதல்.
யாராவது ஒருவர் மனிதனாக வாழத்தெரியாமல், புனிதனாக வாழ முடியுமா?
வாழ்க்கையின் ஒவ்வொரு படி முறைகளையும் தாண்டி வெற்றி அடைவதுபோல, ஒருவன் புனிதனாக இருக்கவேண்டும் என்றால், அவன் முதலில் மனிதப்பண்புகளை வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். மனிதப்பண்புகள் இல்லாமல் புனிதத்துவம் இல்லை.
சாதாரணமாக பொய் சொல்லும் ஒருவர், அல்லது, களவு எடுக்கும் ஒருவர் புனிதத் தன்மையில் வாழ முடியுமா? முடியாது. ஏனென்றால் பொய் சொல்லக் கூடாது, களவு எடுக்கக்கூடாது என்பது அடிப்படை மனதப்பண்பு. அந்த அடிப்படை மனிதப்பண்பே இல்லாதபடியினால்தான் எல்லா மதங்களும் பெரியவங்களும் மனிதப்பண்போடு வாழ்வதற்கு சொல்லிக் கொடுக்கின்றது. நாமளும் முதலில் மனிதப் பண்பை வளர்த்தோம் என்றால் அதுவே புனிதத்துவம்.
இந்த மனிதபண்பும் புனிதத்துவமும் எங்கேயும் அல்ல. அது நம் உள்ளத்துக்குள்ளெயே இருக்கிறது. அதை உணர்ந்தால் அதுவே தெய்வத்தை அனுபவிப்பதற்கான வழி.
அதனால நாம் மனிதனாக வாழாமல் புனிதனாக வாழ்கின்றோம் என்று நேரத்தை செலவழிக்காமல், மனிதனாக வாழ்ந்து புனிதனாக வாழ் முயற்சி செய்தால், ஒருநாள் நாம் வாழ்வில் உண்மை நிலையை அடைவோம்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





