மரியாள் ஒரு வேதம்….

No Gravatar

மரியாள் ஒரு வேதம். ஆம் வேதம் என்பது இறைவனின் எண்ணங்களின் வெளிப்பாட்டு
வண்ணங்களென்பார்கள். மரியாளும் இறைவனின் எண்ணமாக எவ்வாறு அமைந்தாளென்பதை
முதலில் எடுத்து நோக்குவோம்.

ஏவாளை நாகவுருவிலமைந்த அலகை தூண்டி அவள் உண்ணப்படக் கூடாதது என்று பணிக்கப்பட்டிருந்த
கனியை அவளும் உண்டு ஆதாமுக்கும் கொடுக்க வைத்த சிங்காரத் தோட்டத்து ஆதாம் ஏவாள்
கதையினிலே – இறைசித்தத்தை மனிதன் அலகையின்  தீய உணர்வின் உந்துதலினால் மீறுவதே
மனிதத்துன்பங்களின் தொடக்கமென்பது உணர்த்தப்படுகிறது.

ஆனால் இறைசித்தத்தை மீறுவோருக்கும் இறைசித்தத்தை பின்பற்றுவோருக்குமான போராட்டம் ஒன்றின்
தொடக்கமாக அதனை மாற்றும் கடவுள் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேனென்று
அலகைக்கு தீமைக்கு எச்சரிப்பு விடுக்கின்றார்.

அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும் நீ அதன் குதிக்காலைக் காயப்படுத்துவாய் எனக் கூறி
நன்மைத்தனம் என்னும் இறைசித்தத்தை தீமை வெல்லமுடியாது தாக்கங்களையே ஏற்படுத்தும் என்கிற
நம்பிக்கை மொழியினை மனிதனுக்கு அளிக்கிறார். இந்த நம்பிக்கை மொழியின் இறைவார்த்தையின்
வெளிப்பாடுதான் மரியாள். இந்த இறைவனின் எண்ணத்தின் மானிட வண்ணம்தான் மரியாள்.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD